பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சரைப் அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
“நாட்டிலிருந்து இனவாதத்தை விரட்ட நினைத்தால் இஸ்மாயில் சப்ரியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்”, என டிஏபி இடைக்காலத் தலைவர் டான் கொக் வாய் கூறினார்.
இஸ்மாயில் சப்ரி யாக்கூப், விலைகளைக் குறைக்க மறுக்கும் சீனர்களின் கடைகளை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என திங்கள்கிழமை முகநூலில் பதிவிட்டு ஒரு சர்ச்சையை உண்டு பண்ணியிருந்தார்.
நஜிப் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் அமைச்சரவை “பொய் சொல்லும் அமைச்சருடன் ஒத்துழைப்பதாகவே” கருதப்படும் என டான் குறிப்பிட்டார்.
செவிடன் காதில் சங்கு ஊதுவதைப்போல இருக்கிறது உங்களது கோரிக்கை !!!
அமைச்சரவையிலிருந்து நீக்குவதா! ஒரு காலும் நடக்காது.இதுவரை அம்னோவை சேர்ந்த எத்தனையோ அமைச்சர்கள் இன துவேஷத்தை அள்ளி வீசியிருக்கிறார்கள்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அதுபோல்தான் இதுவும்.
அடப்பாவிகளா…இனவாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றால் ஒட்டு மொத்த அமைச்சரவையும் கூண்டோடு காலியாக வேண்டியிருக்குமே…அட பத்துமலை முருகா..!
விடுங்கள் போதையில் உளறிவிட்டான் .