சீனர்களின் கடைகளைப் புறக்கணிக்க அமைச்சர் இஸ்மாயில் சப்ரி விடுத்த அறைகூவலை அம்னோவைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்கலாம். ஆனால் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு அதில் உடன்பாடு இல்லை.
கெப்போங்கில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர், விலைவாசி உயர்வுக்கும் இனத்துக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டு, இஸ்மாயில் சப்ரி உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றார்.
“இது பிரச்னைக்கு எதிர்மறையான வழியில் தீர்வு காண முயல்வதாகும். உண்மைக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.
“என்ன சொல்கிறோம் என்று அவர் சிந்திக்கவில்லைபோலும். கவனமாக சிந்தித்துப் பார்த்தால் சீனர்களின் கடைகளைப் புறக்கணிக்கச் சொல்லி இருக்க மாட்டார்”, என மகாதிர் கூறினார்.
பச்சொந்தி!
நீ ஆதரிச்சா என்ன ஆதரிகலனா என்ன ஒரு வித்தியாசமும் இல்ல உனக்கு சூடான விசயத்துல மூக்க நொளாச்சி ச்சீப் பப்ளிசிட்டி தேடனும்
இவன் நேரத்திற்கு நேரம் மாறி மாறி பேசுவான். இவனின் பேச்சை நான் என்றுமே நம்பமாட்டேன். malay dilemma படித்தால் தெரியும்