பிரதமர் அலுவலகம்: சாப்ரி சீன வணிகர்களை குறிவைக்கவில்லை

 

yrsayambiganajibseriouslyவிவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அவரது முகநூலில் பதிவு செய்திருந்ததாக கூறப்படுவதற்கு முற்றிலும் எதிர்மாராக அந்த அமைச்சர் சீன வணிகர்களை மட்டும் குறிவைக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அமைச்சர் சாப்ரி தெரிவித்த கண்டனம் அனைத்து வணிகர்களையும் உள்ளடக்கியது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை சாப்ரி அவரது முகநூலில் பொருள்களின் விலையைக் குறைக்காத சீன வணிகர்களை புறக்கணிக்குமாறு குறிப்பாக மலாய்க்காரர்களை கேட்டுக் கொண்டார்.

அந்த சினமூட்டும் வேண்டுகோளை விடுத்த பின்னர், தாம் “பிடிவாதக்கார” சீன வணிகர்களை மட்டுமே குறிப்பிட்டதாக விளக்கம் அளித்தார்.apology

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிஎன் அரசாங்கம் “தொடர்ந்து அனைத்து இனங்களின் நலன்களைத் தற்காத்து பாதுகாக்கும்” என்பதை பிரதமர் நஜிப் வலியுறுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடயே, இஸ்மாயில் சாப்ரி பல அம்னோ தலைவர்களின் ஆதரவைத் திரட்டியுள்ளதோடு நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் வீர வரவேற்பையும் பெற்றார்.