1எம்டிபி நிறுவனத்தின்மீது அடுக்கப்படும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க முடியாமல் இருப்பதைக் குறைகூறினால் குறை சொல்பவர்களைத் தாக்குவதற்கெனவே புதிதாக வலைப்பதிவர்கள் புறப்பட்டிருப்பதாக நினைக்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
அரசியல் நோக்கம் கொண்ட இப்படிப்பட்ட வலைப்பதிவர்கள் தம்மையும் இன்னும் பலரையும் தீயவர்களாகச் சித்திரித்துக் காட்ட முனைகிறார்கள் எனத் தம்முடைய chedet.cc வலைப்பதிவில் மகாதிர் கூறியுள்ளார்.
“எனது நம்பகத்தன்மையைக் கெடுப்பதே அதன் நோக்கமாகும். ஆனாலும், நான் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டுதான் இருப்பேன், கேய்மன் தீவிலிருந்து கொண்டு வரப்பட்ட பணம் எங்கே?.
“ரிம8பில்லியன் கையில் இருக்கும்போது பணம் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன?
“இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் கேள்வி கேட்பவர்களைக் கெட்டவர்களாகக் காண்பிக்கப் பார்க்கிறார்கள்.
“இப்படிச் செய்வதைப் பார்க்கையில் 1எம்டிபி-இல் நிலைமை சரியாக இல்லை என்ற சந்தேகம்தான் வலுப்படுகிறது”, என மகாதிர் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் கொடுத்த பயிற்சி! எல்லாம் சரியாக வேலை செய்கிறது!
உன் ஆட்சியிலும் மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது ஆனால் யாரும் வாய் திறக்க முடியவில்லை திரு(ட்டு) காக்க அவர்களே.
தற்போது நிலைமை சிறிது மாறி உள்ளது அதற்கு பிரதமர் நஜிப்புக்கு நன்றி கூறியே ஆகா வேண்டும்…..
விலைவாசி உயர்வினால் பாதிப்பு அடைந்திருக்கும் மக்களுக்கு “BRIM” என்ற மக்களுக்கான “லஞ்ச” தொகையை அதிகரிக்க இந்த பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று பிரதமர் எண்ணி கொண்டிருக்கும்போது, இப்படியெல்லாம் கேள்வி கேட்டு, பிரதமரை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி, சந்தோஷ படுகிறீர்களே, இது நியாயமா ?