விலைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கூட்டரசு அரசாங்கத்திடம் இருக்கும்போது மத்திய அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் சீனர் கடைகளைப் புறக்கணிக்குமாறு மலாய்க்காரர்களை வலியுறுத்துவது “அறிவீனம், மடத்தனம்” எனச் சாடியுள்ளார் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அரிப் பஹார்டின்.
சம்பந்தப்பட்ட அமைச்சுகள் விலைகளை எளிதாகக் குறைக்க முடியும் என்கிறபோது சீன வியாபாரிகள்மீது பழிபோடுவது ஏன் என அவர் வினவினார்.
“விலை உயர்வாகவுள்ள கடைகளில் அல்லது விலை மலிவாகவுள்ள கடைகளில்தான் பொருள்கள் வாங்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. மக்கள் சுய விருப்பத்தின்பேரில்தான் வாங்குகிறார்கள்”, என்றாரவர்.
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர், உண்மையான பிரச்னையை, அரிசி, சீனி போன்ற இன்றியாமையாப் பொருள் விலைகளின்மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடு இல்லை, அதைத்தான் சரிசெய்ய வேண்டும் என்பதை அறியாமல் பேசுகிறார் என்று அரிப் குறிப்பிட்டார்.
“இப்பிரச்னைக்கு இனத்தைக் காரணமாக்காதீர்கள். இதை வைத்து இனவெறுப்பைத் தூண்டி விடாதீர்கள். உண்மையில் இது ஒரு பொருளாதாரப் பிரச்னை”, என பிகேஆர் தேசிய இளைஞர் துணைத் தலைவருமான அரிப் கூறினார்.
சீனர்கள் அல்லர்! மலாய்க்காரர்கள் அல்லர்! இந்தியர்கள் அல்லர்! வணிகர்கள் தான் காரணம் என்றால் நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கையில்! அதனைத் திசைத் திருப்புவது இஸ்மாயில்!
கடந்த காலங்களில் எரிபொருள் விலை உயர்ந்த போது, ரொட்டி சானாய், தேனீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு விலை உயர்த்த அனுமதி தந்தது யார்? சீனர்களா? சீனி விலையை உயர்த்தியது சீனர்களா? பள்ளி பஸ் கட்டணங்களையும், விரைவு பஸ், டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்து கட்டணங்களையும் உயர்த்திய SPAD. அரசாங்க நிறுவனமா? சீனர்கள் நிறுவனமா? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்… எல்லாம் கையாலாகாத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?
1. அடுத்த முறை எரிபொருள் விலை உயரும்போது எந்தப் பொருளும் விலை உயராது, இப்போதைய விலையிலேயே விற்கப்படும் – விற்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அல்லது:-
2. ஏப்ரல் 1-இல் அமலாக்கப்படவிருக்கும் GST. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியை அரசாங்கம் நிறுத்தி வைக்க வேண்டும்.
ஆமாம் ஜி எஸ் தி நிறுத்திவைக்க வேண்டும் இது மக்களின் சுமையை குறைக்கும்.அரசாங்கம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.வாழ்க பாரதம்…
விலைவாசி உயர்வுக்கு அரசாங்கம் தான் முக்கிய காரணம். மக்களிடம் இருந்து வரும் புகார்களை கண்காணிக்க எந்த அமைச்சருக்கும் துணிவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பெருநாள் காலங்களில் மட்டும் சும்மா ஒப்புக்கு விற்பனை பகுதிக்கு வந்து செல்வதோடு சரி அதற்குப் பிறகு பத்திரிகை அறிக்கைகளோடு நின்று விடுவார்கள்…?