வெள்ளிக்கிழமை தொழுகையுரை பற்றிக் கருத்துரைத்த பால்சன்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

paulsenடிவிட்டரில்  முஸ்லிம்களை  அவமதித்து  பதிவிட்டதற்காக  உரிமைகளுக்காக  போராடும்  வழக்குரைஞர் அமைப்பின்  செயல்முறை  இயக்குனர்  எரிக்  பால்சன்,   இன்று  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டு தேச  நிந்தனைக்  குற்றம் சாட்டப்பட்டார். பால்சன், அக்குற்றச்சாட்டை  மறுத்து  விசாரணை  கோரியுள்ளார்.

இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாக்கிம்), “வெள்ளிக்கிழமை  தோறும்  தீவிரவாதத்தை”  ஊக்குவிக்கிறது  என  ஜனவரி 10-இல்  டிவிட்டரில் பதிவிட்டிருந்ததாக  அவர்மீது  அச்சட்டத்தின்  பகுதி4(1) (சி)-இன்கீழ் குற்றம்  சாட்டப்பட்டது.

செஷன்ஸ் நீதிமன்ற  நீதிபதி  அப்துல்  ரஷிட்  டாவுட், ரிம2,000   பிணையிலும்  ஒருவரின்  உத்தரவாதத்தின்பேரிலும்  பால்சனை  விடுவித்தார்.