ஹிசாமுடின்: எம்சிஎ, மஇகா இஸ்மாயிலை பதவி விலகச் சொல்லவில்லையே!

 

hishamசர்ச்சைக்குள்ளாகியிருக்கும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியின் அறிக்கையை மீட்டுக்கொள்ளுமாறு அமைச்சரவை அவரை கேட்டுக்கொள்ளவில்லை என்கிறார் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன்.

அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட மசீச மற்றும் மஇகா அமைச்சர்கள் இஸ்மாயில் பதவி விலக வேண்டும் என்று கூட கேட்கவில்லை என்ற தகவலை அவர் வெளியிட்டார்.

“எந்த அறிக்கையை அவர் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்? அவர் பதவி விலக வேண்டும் என்றுகூட கேட்கவில்லையே”, என்று ஹிசாமுடின் கூறியதாக சின் சியு டெய்லி கூறுகிறது.

இதைப் புரிந்துகொள்வதில் தவறு ஏற்பட்டிருக்கலாம். இஸ்மாயிலின் அறிக்கை மலாய்க்காரர்கள் சீன வணிகர்களை புறக்கணிக்க வேண்டும்Safrie3என்ற அர்த்தம் கொண்டதல்ல. ஆகவே, மீட்டுக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

தமக்கு இஸ்மாயில் சாப்ரியை நீண்ட காலமாக தெரியும். அவர் இனவாதத்தைத் தூண்டக்கூடியவர் அல்லர் என்றும் ஹிசாமுடின் கூறினார்.

பயனீட்டாளர்களின் சக்தியைப் பயன்படுத்தி பொருள்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது என்று அவர் சுட்டிக் காட்டினார்.