மலேசியாகினி அதிகாரப்பூர்வமான நுழைவு அனுமதியை வைத்திருந்தபோதிலும், புத்ரா ஜெயா, பிரதமர் அலுவலகத்தில்(பிஎம்ஓ) இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திக்கும் நிகழ்வுக்குச் சென்று செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
மலேசியாகினிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் பிஎம்ஓ செல்ல அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் அதன் செய்தியாளரைத் தடுத்து நிறுத்தினர். “மேலிட உத்தரவு” என்று சொல்லி விட்டனர்.
கடந்த வாரம்தான் ஜோகோ வருகை பற்றிய செய்தி சேகரிக்க தகவல் அமைச்சிடம் விண்ணப்பித்து மலேசியாகினி அந்த அனுமதியைப் பெற்றிருந்தது.
மேலிட உத்தரவோ, கீழிட உத்தரவோ புத்ரா ஜெயா உத்தரவு என்றால் வாய்பொத்தி கைகட்டி நிற்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்! இதென்ன ஜோக்கோவுடன் சந்திப்பா அல்லது போக்கோ ஹாராமுடன் சந்திப்பா!