நெகிரி செம்பிலானில் இனி, முதலில் மணமுறிவு பிறகுதான் மத மாற்றம்

nsஇனி  வரும் காலங்களில்  நெகிரி  செம்பிலானில்  மதம்  மாற  நினைக்கும்  முஸ்லிம்-அல்லாத  தம்பதிகள்  முதலில்  மணமுறிவு  செய்துகொள்ள  வேண்டும்.

அதை  அடுத்து, எதிர்காலத்தில்  சட்ட  பிரச்னைகளைத்  தவிர்க்க, மதம்  மாறியவர்  தம் மதமாற்றத்தின்மீது  சத்திய பிரமாணம்  ஒன்றையும்  செய்திட  வேண்டும்.

இப்புதிய  சட்டம் 2003 (நெகிரி  செம்பிலான்)  இஸ்லாமிய  சமய  நிர்வாகச்  சட்டத்தில்  சேர்த்துக்கொள்ளப்படும்  என  மந்திரி  புசார்  முகம்மட்  ஹசான்  கூறினார்.

“ஒருவர்  முதலில்  இஸ்லாத்துக்கு  மதம்  மாறி அதன்  பின்னர்  திருமணத்தை  முறித்துக்கொள்ள  முடிவு  செய்தால்  பிரச்னைகள்  எழும். அதனால்  மதம் மாறுவதற்குமுன்   மணமுறிவு  செய்வது  நல்லது”, என்றாரவர்.

அதேபோல், சத்திய  பிரமாணம்  முஸ்லிமாக  மதமாறியவர்  இறந்தால்  அவரை  அடக்கம்  செய்வதன்மீது  குடும்பங்களிடையே  தகராறு  ஏற்படுவதைத் தடுக்க  உதவும்.