அன்வார் இப்ராகிமின் மகள் நுருல் நுகா, பெர்மாத்தாங் பாவில் போட்டியிடுவார் என்று ஊகங்கள் அடிபடுகின்றன.
செய்தியாளர் கூட்டமொன்றில் அவரின் அக்காள் நுருல் இஸ்ஸாவிடம் அதைக் கேட்டதற்கு அவர் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார்.
அச்செய்தியாளர் கூட்டம் ‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’ பற்றி விளக்குவதற்காகக் கூட்டப்பட்டது என்பதால் இடைத் தேர்தல் வேட்பாளர் பற்றி அதில் எதுவும் தெரிவிக்கப்படாது என்றார்.
ஆனால், வெள்ளிக்கிழமை பக்கத்தான் ரக்யாட் கூட்டம் நடைபெறும்போது அதில் பெர்மாத்தாங் பாவ் தொகுதி பற்றி முடிவெடுக்கப்படும் என்று லெம்பா பந்தாய் எம்பி-ஆன நுருல் கூறினார்.
பகோஸ்
வெற்றி அன்வாருக்கே
குடும்பத்தோடு போட்டியிடுங்கள்
சரியான தேர்வாக இருக்கும்..!
உதாரணம் முன்னாள் பிரதமர் ரசாக் மகன் நஜிப் இன்று பிரதமர்
முன்னாள் பிரதமர் உசேன் ஒன் மகன் ஹிஷாமுடின் அடுத்த பிரதமர்
முன்னாள் பிரதமர் மகாதீர் மகன் முக்ரிஸ் எதிர்கால பிரதமர்
ங்கொய்யலா சாந்தி……ஏன் இந்த கோல வெரி
பக்காத்தானின் ஒருமித்த முடிவாக இருப்பின் வெற்றி நிச்சயம். குளுகோரைபோல் இந்த இடைத்தேர்தலும் BN கட்சிக்கு ஒரு செருப்படியாக அமைய வேண்டும்.!!!!
shanti நஜீப் எப்படி வந்தார்? துன் ரசாக் அவர்கள் சாகும்போது இவர் இலண்டனில் படித்துக்கொண்டிருந்தார், துன் ரசாக் அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருந்தவர்கள் , இவரை உடனே தேர்தலில் நிறுத்தி பஹாங் மாநில முதலமைச்சராக நியமித்தனர். அப்பன் நிழலிலேயே படிப்படியாக இன்றைய நிலையில் உள்ளார். அதனால் தான் என்னவோ நாட்டில் எது நடந்தாலும் மௌனம் சாதிக்கிராரோ? அப்புறம் ஏன் நையாண்டி செய்கிறீர். முடிந்தால் நீங்களும் தேர்தலில் குதியுங்களே. உதுவும் உண்மைதான். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வத்த்து நன்மைக்கு வழி நடத்துவாராக.