ஒரு டிவிட்டர் பதிவுக்காக கேலிச்சித்திரக்காரர் ஸுனார் நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மூன்று நாள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
கூட்டரசு நீதிமன்றம் அன்வார் இப்ராகிமின் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையை நிலைநிறுத்தித் தீர்ப்பளித்ததை அடுத்து ஸுனார் டிவிட்டரில் இட்டிருந்த பதிவுக்காக அவர் கைது செய்யப்பட்டார். தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1) (சி)-இன்கீழ் அவர்மீது விசாரணை நடைபெறுகிறதாம்.
அவர் டிவிட்டரில் இட்டிருந்த பதிவு இதுதான்: “கருப்பு அங்கி அணிந்த ஏவலர்கள் தாங்கள் அளித்த தண்டனையை எண்ணிப் பெருமிதம் கொண்டிருக்கிறார்கள். அரசியல் எஜமானர்களிடமிருந்து நிறைய வெகுமதி கிடைத்ததுபோலும்”.
உண்மையை சொன்னால்தான் இவர்களுக்கு பிடிக்காதே???
சிந்திக்கும் வண்ணம் தரம் கொண்ட கேலிச் சித்திரங்களை வெளியிடுவதிலும் யாது தவறு ??? நாட்டு அரசியல் நிலவரமே பெருங்கூத்து..இதில் கேலிச் சித்திரத்துக்கும் தடையா????
பாராட்டுகள் ஷுனார்.
விந்து கண்டு பிடிப்பில் அபாரம்
கப்பல் கண்டுபிடிப்பில் கபோதி …..
இங்கே தான் நீதி ஜடமாகி விட்டதே ???
பைபிள் லில் நீதிக்காய் போராடுபவரை என்ன சொல்கிறது .
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்
கேலிசித்திரக்காரரை பிரான்சில் கொலையே செய்துவிட்டார்கள்! இது என்ன விசாரணை தானே! நையாண்டி செய்தால் கோவனாண்டி ஆக்கிவிடுவார்கள்! இது மலேசியா!
வேலைவெட்டி இல்லையோ ………