சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியிடம் அவர் நாடாளுமன்றத்தில் அன்வார் இப்ராகிமுக்குப் பதிலாக எதிரணித் தலைவர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உள்ளது பற்றி வினவியதற்கு அவர் பதிலளிக்கத் தயங்கினார்.
செய்தியாளர்கள் வற்புறுத்திக் கேட்டதற்கு அவ்விவகாரத்தில் தம் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை என்று கோம்பாக் எம்பியும் பிகேஆர் துணைத் தலைவருமான அவர் தெரிவித்தார்.
“பக்கத்தான் ரக்யாட்டின் பலமே எதையும் கூடிப் பேசி ஒருமித்த முடிவு காண்பதுதான்.
“ஆதலால், பக்கத்தான் கூட்டம்வரை காத்திருப்போம்”, எனச் செய்தியாளர்களிடம் அஸ்மின் கூறினார்.
மாப்ளே ..எடுத்துக்கோ இல்லேனா உனக்கு ஆப்புதான்..
மாநில மாந்தரி பெசார் நிலைக்கு வான் அசிசா வரக்கூடாது எனக் பாஸ்க்காரன் எதிர்ப்பு தெரிவித்தான். அதற்க்கு பதிலாக அஸ்மினுக்கு அது போய்செர்ந்த்தது. இப்போது இருக்கும் நெருக்கடிக்கு பந்தாய் நாடாளமன்ற உறுப்பினர் நுருலுக்கு நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைமை பொறுப்பை கொடுப்பதே சிறப்பு…!
அஸ்மின் பக்காத்தானின் ஒருமித்த முடிவுக்கு காத்திருப்பதே சிறப்பு.
சீரியன் , உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.
பெர்மாதாங்கில் வான் மீண்டும் நின்றால் மாற்றம் வராது ..வானுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஆகும் நேரம் வந்து விட்டது … பாகாதான் MP கள் Dun கள் அன்வாரை விடுவிக்க பேரரசருக்கு மன்னிப்பு கோரும் மனு போடாலாம்.