நேற்று பெடரல் உச்சநீதிமன்றம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்து அவருக்கு முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த ஐந்தாண்டு சிறை தண்டனையை நிலைநிறுத்தியது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பக்கத்தானின் எதிர்காலம் பற்றிய ஊகங்களோடு, பொதுவாக நாட்டின் அரசியல் போக்கு எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனைக் கவனத்தில் கொண்டு, “அன்வார் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால், மலேசியாவில் அடுத்து நடக்கப் போவது என்ன?” என்ற தலைப்பில் மலேசியாகினி அதன் முதலாவது பொதுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. அக்கருத்தரங்கு பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள மலேசியாகினியின் புத்தம் புதிய கட்டடத்தில் நாளை, பெப்ரவரி 12, இரவு மணி 8.00 க்கு தொடங்கும்.
அரசியல் எதிரணி மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் முக்கிய பிரமுகர்கள் அக்கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.
அவர்களில் பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா, அரசியல் ஆர்வலர் ஹிசாமுடின் ரயிஸ், பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பாஸ் மத்திய குழு உறுப்பினர் முஜாகிட் யுசுப் ராவா மற்றும் டிஎபி மத்திய குழு உறுப்பினர் லியு சின் தோங் ஆகியோர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இக்கருத்தரங்கில் பல்வேறு முக்கியமான கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.
மலேசியாகினியின் புதிய மூன்று மாடிக்கட்டடத்தில் கருத்தரங்கு நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் 100 பேர் அமர்வதற்கான இடவசதி உண்டு. நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி நேரடியாக ஓன்லைனில் பதிவு செய்யப்படும்.
The address for the Malaysiakini office is as follows:
No 9, Jalan 51/205A,
Off Jalan Tandang,
Petaling Jaya.
Tel: 03-777 00017
Google Maps link
Waze link
ஏதோ! ஒன் லைன் சேவையை யாரும் முடக்காமளிருந்தால் நல்லது….
நீயாயம் பிறக்கும் காலம் வெகுதுரத்தில் இஇல்லை விரைவில் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும் காலம் நெருங்கிவிட்டோம்