மகாதிர்: நான் பிரதமராக இருந்தால் பதவி விலகுவேன்

resignமுன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட் இன்று  பிரதமராக  இருந்தால் பதவியைவிட்டு  விலகிச்  சென்று விடுவாராம்.

ஒரு  கேள்விக்குப்  பதிலளித்த   அவர், பிரதமராக  இருப்பவரால்  திறமையாக  செயல்பட  முடியாதபோது  பதவி விலகுவதே  நல்லது  என்றார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறி  வைத்துத்தான்  அவர்   இவ்வாறு  கூறினார்  என்பது  தெளிவு.

“யாரும்  வற்புறுத்தி  நான்  பதவி  விலகவில்லை. 22 ஆண்டுகளை நீண்டகாலம்  என்று நானே  நினைத்தேன்.

“திறம்பட  செயல்பட  முடியாதபோது, மக்கள்  குறைகூறும்போது, தயவு  செய்து  நாட்டுக்கு சிக்கலை உண்டுபண்ணாதீர்கள்”, என்றாரவர்.

இன்று  காலை  கோலாலும்பூரில் ‘மலேசியாவின் தர்மசங்கடம்’  என்னும்  கருத்தரங்கில்  கலந்துகொண்டபோது  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.