காணாமல்போன் எம்எச்370 பயணிகளின் உறவினர்கள் ஒரு குழுவாக சீனாவிலிருந்து மலேசியா வந்துள்ளனர்.
எம்எச்370 “விபத்து” காரணமாகக் காணாமல்போனதாக மலேசிய அரசாங்கம் அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அவர்கள் வந்திருக்கிறார்கள்.
15-பேரடங்கிய அக்குழுவினர், எம்ஏஎஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து (டிசிஏ) அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எம்ஏஎஸ் தலைமையகத்தின்முன் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
பணத்துக்காக வரவில்லை என்றும் தேடல், மீட்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தவே வந்திருப்பதாகவும் காணாமல்போன விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவரான லி யானின் தாயார் ஷாங் ஹுய் ஜுன் கூறினார்.
“எனக்குப் பணம் வேண்டாம். என் பிள்ளைதான் வேண்டும்”, என்றவர் கண்ணீர் சிந்தினார்.
இன்னொருவர் ஷாங் ஜியான் ஈ, 59,, “எம்ஏஎஸ் சந்திக்க வ்ரவில்லையென்றால் டிசிஏ அலுவலம் செல்வோம், பிரதமர் அலுவலகம் செல்வோம், போக்குவரத்து அமைச்சரைத் தேடிச் செல்வோம்”, என்றார்.
“இப்போது வந்திருப்பது முதல் தொகுதிதான்…….எங்களுக்குப் பின்னே இரண்டாவது தொகுதி, மூன்றாவது தொகுதி, நான்காவது தொகுதி, ஐந்தாவது தொகுதி என வந்து கொண்டே இருப்பார்கள்….”, என ஜியான் ஈ தெரிவித்தார்.
மலேசிய மக்களை போல “BR1M” என்ற லஞ்ச தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற நாக்கை தொங்க போட்டு காத்திருக்கும் கூட்டமல்ல நாங்கள் நிருபித்து உள்ளீர்கள்.
உங்களது இந்த போராட்டம் மூலமாகமாவது எங்க நாட்டு எருமைகளுக்கு சுறுசுறுப்பு வருகிறதா என்று பார்ப்போம்.
மங்கோலியா அழகிக்கு பிறகு C4 வெடிகுண்டை மறுபடியும் உபயோகிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்கு எங்களை ஆளாக்க மாட்டீர்ர்கள் என்று நம்புகிறோம்.