சிறையில் அன்வார் இப்ராகிமின் உடல்நலம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்பதுதான் அவரது குடும்பத்தாரின் கவலையாகும். மற்றபடி அவருக்குத் தனிச் சலுகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
உடல்நிலை நன்றாக இல்லை என்கிற நிலையில் அவர் சிறை அறையில் வைக்கப்பட்டிருப்பதையும் ஒரு சிறிய மெத்தையில் தரையில் படுக்க வேண்டியிருப்பதையும் நினைத்து குடும்பத்தார் கவலை கொண்டிருப்பதாக அவரின் மகள் நுருல் நுஹா கூறினார்.
அன்வாருக்கு விஐபி சலுகை கிடையாது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறியிருப்பதற்கு எதிர்வினையாக அவர் இவ்வாறு கூறினார்.
“அவருக்கு விஐபி சலுகை கேட்கவில்லை. பார்க்கப்போனால், அவர் அங்கு(சிறையில்) இருக்கவே கூடாது. அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதே அநியாயம்தான்.
“அவருக்கு முதுகு வலி மோசமடைந்துள்ளது. வயது 67 ஆகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.
“அவர் ஊக்கமளிக்கும் மனிதர். தன்னை இளைஞராகவே நினைத்துக் கொண்டிருப்பவர். ஆனால், வயதாகிக் கொண்டிருக்கிறது. அவரது முதுகு வலி மோசமடையாதிருக்க இன்னும் வசதியான இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம்”, என்றவர் விம்மினார்.


























ம்ம்ம் ,வருத்தம் அழைக்கிறது ,,இந்த நாட்டுக்கு சீக்கிரம் ஒரு கேடு நடக்க போகிறது ,,பொறுத்திருந்து பார்ப்போம்
அனைவரும் அமைதி காப்போம். உண்மை ஒரு நாள் வெளிவரும்.ஒன்றுபட்டு மக்கள் கூடனியை வலுபடுதுவோம்.
நமது உள் துறை அமைச்சருக்கு இரண்டு பக்கமும் செவிட்டு அறை விட்டது போல் இருக்குமே…….