ஆர்ஓஎஸ்-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பழனிவேல் உத்தேசம்

palaniசங்கப்  பதிவகம் (ஆர்ஓஎஸ்) மீது வெறுப்படைந்துள்ள  மஇகா  தலைவர்  ஜி.பழனிவேல், அது  கட்சிக்கு “அநீதி இழைத்திருப்பதாக”க்  குற்றம்சாட்டி  அதற்கு  எதிராக  நீதிமன்றத்தில்  நடவடிக்கை  எடுப்பது  பற்றித்  தீவிரமாக  ஆராய்ந்து வருகிறார்.

இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  பழனிவேல், ஆர்ஓஎஸ்  2014  டிசம். 5, 2014 டிசம். 31, 2015 பிப். 6  ஆகிய  தேதிகளில்  கட்சிக்கு  அனுப்பிய  கடிதங்களைத்  திரும்பப்  பெற்றுக்கொள்ள  வேண்டும், தவறினால்  நீதிமன்றம்  செல்லப்போவதாக  தெரிவித்தார்.

“அதை  அவர்கள் செவ்வாய்க்கிழமை(பிப் 7)  மாலை  5மணிக்குள் செய்து அமைதித் தீர்வுக்காக  பிப்ரவரி 5  கடிதத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கும்  பரிந்துரைகளை  ஏற்க  வேண்டும்.

“ஆர்ஓஎஸ்  சட்டவிரோதமாகவும்  பாரபட்சமாகவும்  நடந்து   கொள்வதை  உடனடியாக  நிறுத்த  வேண்டும்”,என்றவர்  கேட்டுக்கொண்டார்.

ஆர்ஓஎஸ்  கடந்த  வாரக்  கடைசியில்  அனுப்பிய  கடிதத்தில்  மஇகா-வின்  எல்லாப்  பதவிகளுக்கும்  மறுதேர்தல்  நடத்தும்படி  உத்தரவிட்டிருந்தது.