கடந்த 2013 ஆண்டு பொதுத் தேர்தலில் 52 விழுக்காடு மக்கள் வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கு நஜிப் முன்வந்தார் என்று அன்வாரின் மகள் நுருல் இஸ்ஸா கூறிக்கொண்டார்.
தமது தந்தைக்கு அப்பதவியை வழங்க முன்வந்தது பிரதமர் நஜி ரசாக் என்று கூறிய நுருல், அதற்கு அவர் விதித்த நிபந்தனை அன்வார் அவரது பக்கத்தான் ரக்யாட் நண்பர்களை “புறக்கணிக்க” ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதாகும் என்றார்.
“பாஸை புறக்கணியுங்கள், டிஎபியை புறக்கணியுங்கள், துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள், அரசாங்கத்தை அமைப்போம் – ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்போம், நஜிப் அன்வாரிடம் கூறினார்”, என்று நேற்றிரவு செபெறாங் ஜெயாவில் “மக்கள் சுதந்திரம்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு செராமாவில் இஸ்ஸா கூறினார்.
“அன்வாரின் முடிவு என்ன? அவர் அதனை முற்றாக உதறித்தள்ளினார், ஏன்னென்றால் வாழ்விலும் சாவிலும் வாங்கவும் விற்கவும் முடியாத ஒரு கோட்பாடு அடிப்படையில் அமைந்த கூட்டணியில் மட்டும்தான் நாம் உழைக்க முடியும்”, என்று இஸ்ஸா விளக்கமளித்தார்.
முன்னதாக, அன்வார் பிஎன்னில் துணைப் பிரதமர் பதிவியை வகித்திருந்தார். 1998 ஆம் ஆண்டில் அவரை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் பதவியிலிருந்து அகற்றினார். குதப்புணர்ச்சி வழக்கில் அதிகார அத்துமீறல் சம்பந்தமாக அவர் 1999 லிருந்து 2004 வரையில் சிறையிலடைக்கப்பட்டார்.
தாபாக் எக்ஸ்போவில் 1,000 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடம் பேசிய இஸ்ஸா, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நஜிப் தயாராக இருந்ததோடு எதிரணி கூட்டணியுடன் சமரசம் செய்துகொள்வது பற்றியும் பேச தயாராக இருந்ததாக தெரிவித்தார்.
ஜூன் 2013 ஆண்டு வாக்கில் ஜாக்கர்த்தா சென்றிந்த போது, தாம் சமரச முயற்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்ததை நஜிப் உறுதிப்படுத்தினார். ஆனால் அன்வாருடன் உடன்பாடு செய்துகொண்டதை அவர் மறுத்தார், ஏனென்றால் முதலில் இதர அம்னோ தலைவர்களின் அவர் பெற வேண்டியிருந்தது.
நடுவராக இந்தோனேசிய அதிபர்
நஜிப் மற்றும் அன்வார் ஆகிய இருவருக்கும் இடையில் நடுவராக இருக்குமாறு முன்னாள் இந்தோனேசிய அதிபர் ஜுசுப் கல்லாவை அன்வார் கேட்டுக்கொண்டுள்ளார் என்று நஜிப் இந்தோனேசிய இதழான தெம்போவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அன்வார் 13 ஆவது பொதுத் தேர்தலில் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என்பதை நஜிப் மறுத்தார்.
புத்ரா ஜெயாவை கைப்பற்ற தவறிய அன்வார் பாக்கத்தான் தேர்தலில் வெற்றி பெற்றது என்பதை வலியுறுத்தியதோடு தேர்தலில் மோசடி செய்ததாக அவர் பிஎன் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தினார்.
எந்த ஒரு சமரச முயற்சியையும் மேற்கொள்வதற்கு முன்பு ஊழல், கல்வி, பொருளாதாரம் மற்றும் மக்கள் பணத்தை அரசாங்கம் வீணடித்தல் ஆகியவை குறித்து பாக்கத்தான் விவாதிக்க விரும்பியதாகவும், ஆனால் நஜிப் அதற்கு செவிசாய்க்க மறுத்து விட்டதாகவும் இஸ்ஸா கூறினார்.
“மேற்கூறப்பட்டவற்றுக்கு மாறாக இப்போது நாம் ஒரே மலேசியா மேம்பாடு பெர்ஹாட் முறைகேடுகள், மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தவிருக்கும் 6 விழுக்காடு பொருள்கள் மற்றும் சேவைகள் வரி, இது எதிர்வரும் ஏப்ரலில் அமல்படுத்தவிருக்கிறது, மற்றும் அகற்றப்போவதாக நஜிப்பே அறிவித்த தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஏகப்பட்ட கைதுகள் ஆகியவை பற்றிதான் கேள்விப்படுகிறோம்”, என்று இஸ்ஸா மேலும் கூறினார்.
சமசர மட்டும் தோல்வி அடையவில்லை. நஜிப் நிருவாகம் இப்போது அன்வார் சம்பந்தப்பட்ட அனைத்தையும் துடைத்தொழிக்க தீர்மானித்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.
“ஏனென்றால், இப்போது அவர்கள் அன்வாரை பற்றி பேச விரும்புவதெல்லாம் குதப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி”, என்று இஸ்ஸா ஆவேசமாக கூறினார்.
மூன்று மணி நேரம் நீடித்த இச்செராமாவில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் ஆகியோருடன் பல டிஎபி மற்றும் பிகேஆர் பினாங்கு மாநில ஆட்சிக்குழுழு உறுப்பினர்களும் பேசினர்.
அன்வாரை வீழ்த்த என் மகன் பயன்படுத்தபட்டான்…. என்று சைபுல்லின் தந்தை கூறிய குற்றசாற்று உண்மை என்றால், அதற்கு உடந்தையாக இருந்த அனைவரின் மீதும் அந்த திறமை வாய்ந்த ஐந்து நீதிபதிகளுக்கு எதிராகவும் போலிஸ் புகார் செய்ய முடியுமா ??? எங்களுக்கு ஆலோசனை தேவை…..
நஜிப் ஒரு மனிதனா மலத்துக்கு சமமனவந்தான் நஜிப் அதான் அன்வார்வேண்டாம் என்று தன்மானத்தோடு சொல்லிவிட்டார்
இத பாருடா ..அம்மணி கொஞ்சம் பார்த்தே பேசு ..இல்லையெனில் நீரும் உன் தந்தையுடன் உள்ளே இருக்க
வேண்டிய நிலை வந்துடும்..
முதலில் நீங்கள் அன்வரிடிம் அனுமதி வாங்கிகிடுங்கள்
“இத பாருடா ..அம்மணி கொஞ்சம் பார்த்தே பேசு ..இல்லையெனில் நீரும் உன் தந்தையுடன் உள்ளே இருக்க வேண்டிய நிலை வந்துடும்..” என்று சாந்தி எழுதியுள்ளார். என்னமோ இவர் தான் சட்ட துறை தலைவர்போலவும், இவரை கேட்டுதான் போலீஸும் நீதி துறையும் வேலை செய்வதாக நினைப்பு இந்த சாந்திக்கு!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தம்பி ,,,
எதோ மாமா மகள் ஆச்சே புத்திமதி சொன்னேன்..
எதோ மாமா மகள் புத்திமதி சொன்னேன்..
மாமாவுக்கு உன்னை குடுடி shanthi