1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), அந்நிறுவனத்தின் கடனைத் தீர்க்க கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன் அந்நிறுவனத்துக்கு ரிம2 பில்லியன் கொடுத்து உதவினார் என்பதை மறுக்கிறது. அது “வெறும் ஊகம்” என்றது கூறிற்று.
“ஆனந்தா அவர்களே அதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இது மூன்றாம் தரப்புகள் கட்டிவிட்ட கதை”, என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா மிங்குவான் மலேசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
கடனைத் தீர்க்க ஆனந்தா உதவியிருந்தால் நிச்சயமாக அது அறிவிக்கப்பட்டிருக்கும் என்றாரவர்.
ஐயா, அருள் அவர்களே, நீங்களும் அரசியலில் சேர்ந்திடலாம். செம்ம எதிர்காலம்../ எதிர்காலம் தெரிகிறது. 2 பில்லியன் கடன் தொகையை செலுத்திவிட்டதா இல்லையா ? செலுத்தியிருந்தால் எப்படி செலுத்தியது என்று தெளிவு படுத்தினாலே போதுமானது. இது பொதுமக்களின் உடைமை./ உரிமை…எல்லா இந்தியனும் சிறந்த அரசியல்வாதியே என்று புலப்படுத்த 1MDB விவகாரம் தகுந்த தளமல்ல…