அம்பிகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட வேண்டும், ஷாபி கூறுகிறார்

 

Ambigachage1அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு 2இல் அரசு தரப்பு வழக்குரைஞராக செயல்பட்ட ஷாபி அப்துல்லா இன்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா மீது தமது கவனத்தைத் திருப்பினார்.

அன்வாருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்காக சட்டத்துறை அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட ஷாபி, அன்வாரை சிறையில் அடைத்ததின் மூலம் பிஎன் “பெரும் தவறு” செய்து விட்டது என்று அம்பிகா வெளியிட்டிருந்த அறிக்கையில் குற்றம் காண்கிறார்.

“அன்வாரை சிறைக்கு அனுப்பியதால் பிஎன் தவறு செய்து விட்டது என்று அம்பிகா கதை விடுகிறார். நீதிமன்றங்கள் பிஎன்னா?

“நீதிமன்றங்கள் பிஎன்னின் ஒரு பகுதி என்ற கருத்தினை எழுப்புவதற்காக அம்பிகா மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட வேண்டும்.

“நடவடிக்கை எடுக்குமாறு நான் சட்டத்துறை தலைவரை கேட்டுக்கொள்கிறேன்”, என்று ஷாபி கூறினார் என்று இன்று மிங்குவான் மலேசியா வெளியிட்ட ஒரு நேர்காணலில் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை பெடரல் உச்சநீதிமன்றம் அன்வாருக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறை தண்டனையை நிலைநிறுத்தியது.Ambigachage2

இதனைத் தொடர்ந்து பல நேர்காணல்களில் ஷாபி குதப்புணர்ச்சி வழக்கு 2 தமக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் சதி என்று அன்வார் கூறியிருந்ததை தாக்கி  வந்துள்ளார்.

ஷாபி நடந்துகொள்ளும் முறைக்காக அவரை அம்பிகா குறைகூறினார்.

ஆனால், தமக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்ற அன்வாரின் கூற்றை மட்டுமே தாம் மறுப்பதாக ஷாபி கூறினார்.

ஷாபியின் நடத்தையை டிஎபி சட்டப் பிரிவின் தலைவர் கோபிந்த் சிங் டியோவும் கடுமையாகச்Ambigachage3 சாடினார்.

தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை பற்றி ஷாபி தெரிவித்து வரும் கருத்துகளுக்கு சட்டத்துறை தலைவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோபிந்த் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் மலேசிய வழக்குரைஞர் மன்றம் அதன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.