“இனவாத அரசியல் இருக்கும் வரையில் இந்தியர்களுக்கு தீர்வு இல்லை”

 

Tragicorphans1இந்நாட்டில் இன அடிப்படையிலான அரசியல் வழக்கத்தில் இருக்கும் வரையில் இந்தியர்களின் அவலநிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராஜதந்திரி இன்று கூறினார். இவர் நூலாசிரியருமாவார்.

மலேசியாவுக்கான ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராஜதந்திரியான கார்ல் வடிவேலா பெல்லே இப்போது ஓர் இந்து என்பதோடு அவர் ஓர் இந்து அறிஞருமாவார். ஒவ்வொரு இனத்தையும் பிரதிநிதிக்கும் கட்சிகளைக் கொண்ட பின் அமைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், அது ஓர் “எதிர்மாறான இயல்புள்ள நடைமுறையாகும்” என்றார்.

“இனவாத நடைமுறை இருக்கிற வரையில், ஒரு குறிப்பிட இனமக்களின் தேவைகள் அந்த இனத்திற்குள்ளேயே அமிழ்த்தப்பட்டுவிடலாம்”, என்று மலேசிய இந்தியர்களின் அவலநிலையைப் பட்டியலிடும் அவரது “துயரார்ந்த அனாதைகள்” என்ற புதிய புத்தக வெளியீட்டின் போது அவர் கூறினார்.

அம்மாதிரியான பிரதிநிதித்துவம் கீழ்மட்ட மக்களின் ஈடுபாடுகள் குறித்து தீர்க்கமான நடவடிக்கைகளை கட்சியோ, பொறுப்புள்ள அமைப்போ, மஇகா போன்றவை, எடுக்காத போது பெரும் பிரச்சனையாகி விடுகிறது என்றாரவர்..

அரசியலில் தற்போதைய இனவாத பிரதிநிதித்துவம் இனவாதப் பிளவை மேலும் வலுவாக்குகிறது. அது ஒற்றுமைக்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
“இந்தியர்களின் அபரிதமான உள்ளார்ந்த ஆற்றல் வீணடிக்கப்பட்டு விட்டது

“அவ்வாறான நடவடிக்கைகள் இனவாத பிரிவுகளை ஆழமாக்கின்றன. அது நம்மிடமிருக்கும் பொதுவானவற்றை வலியுறுத்துவதில்லை, Tragicorphans2ஆனால் நம்மிடையே காணப்படும் வேற்றுமைகளை வலியுறுத்துகின்றன”, என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

சமநிலைக் கொள்கை இல்லாத நிலையில் இந்தியர்களின் “அபரிதமான உள்ளார்ந்த ஆற்றல்” வீணடிக்கப்பட்டு வருகிறது என்றாரவர்.

“முறையான பயிற்சி மற்றும் முறையான கல்வி ஆகியவற்றுடன் மிகப் பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.”

இந்திய சமூகத்திற்காக பிரதமர் நஜிப் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று கூறிய பெல்லே, நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இனவாத பிரச்சனைகளால் அவரின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.

“ஒரே மலேசியா சுலோகம் எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. ஆனால் தொடர்ந்து கிளம்பும் இனவாத சம்பவங்கள் அதனை முடக்கி விட்டுள்ளது என்பது நியாயமான கருத்து என்று நான் நினைக்கிறேன்”, என்றாரவர்.

 

கார்ல் வடிவேலா பெல்லேயின் “துயரார்ந்த அனாதைகள்” நூல்  நாளை வெளியீடு காண்கின்றது

Lim Teck Ghee

வடிவேலா பெல்லே எழுதியுள்ள “துயரார்ந்த அனாதைகள்” என்ற நூல் நாளை (பெப்ரவரி 16) கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் வெளியீடு காண்கிறது. இந்நிகழ்ச்சி இரவு மணி 7.30 லிருந்து 9.30 வரையில் நடைபெறும். 

இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பிரபல ஆய்வாளர் முனைவர் லிம் டெக் கீ, முனைவர் எஸ். நாகராஜன், சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம் மற்றும் எம். ஜானகிராமன் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள். இறுதியில் வடிவேலா சிறப்புரை ஆற்றுவார்.  

இந்நிகழ்ச்சியில் அனைவ்ரையும் தவறாது பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.