சிலாங்கூரில் நான்கு பகுதிகளில் நீர் விநியோகத் தடை

syaநேற்று  தொடங்கி  சிலாங்கூரின்  பெட்டாலிங், ஹுலு  லங்காட், கோலா  லங்காட், செப்பாங்  பகுதிகளில் எதிர்பாராத  வகையில்  நீர்  விநியோகம்  தடைப்பட்டிருக்கிறது.

சுங்கை  செமிஞ்சி  நீர்  சுத்திகரிப்பு  ஆலையில் சுத்திகரிக்கப்பட்ட  நீர்  உற்பத்தி  குறைக்கப்பட்டதுதான்  இதற்குக்  காரணமென்று  சரிகாட்  பெக்காலான்  ஆயர்  சிலாங்கூர் சென். பெர்ஹாட்(சபாஷ்) ஓர்  அறிக்கையில்  கூறியது.

“ஆற்று நீரில்  உள்ள  அம்மோனியா, மங்கனீஸ்  ஆகியவை  அனுமதிக்கப்பட்ட  அளவைத்  தாண்டியதை  அடுத்து  அவ்வாறு  செய்யப்பட்டது”, என  அது  கூறிற்று.

ஆற்றுநீர்  மாசுபட்டதற்கான  காரணத்தை  சிலாங்கூர்  நீர்  நிர்வாக வாரியமும்(லுவாஸ்)  சரிகாட்  கொன்சோர்டியம்  அபாஸ்  சென். பெர்ஹாட்டும்  ஆராய்ந்து  வருகின்றன.