புதிதாக உருவாகியுள்ள அன்வார்-ஆதரவு இளைஞர் இயக்கமான கித்தா லவான், சனிக்கிழமை ஜாலான் புடுவில் அன்வார் இப்ராகிம்- ஆதரவு பேரணி நிகழ்ந்தபோது நடந்ததாகக் கூறப்படும் காலித்தனத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறது.
போலீஸ் பேருந்திலும் ஒரு வங்கியின் பெயர்ப்பலகையிலும் அசிங்கமான சொற்களை எழுதியது கித்தா லவான் அல்ல என அதில் இணைந்துள்ள அன்வார்-ஆதரவு என்ஜிஓ-வான ஜிங்கா13 கூறியது.
“பேரணியில் கலந்துகொண்டவர்கள் அதைச் செய்யவில்லை.
“அது, தீய நோக்கம் தரப்பினர் பேரணிக்கும் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் கெட்ட பெயரைக் ஏற்படுத்த வேண்டும், அப்போதுதான் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்காக செய்த வேலை என நம்புகிறோம்”, என்று ஜிங்கா13 உதவித் தலைவர் மைக்கல் இஸ்கண்டர் அப்துல்லா கூறினார்.
ஜிங்கா13 காலித்தனம் செய்தவர்களின் நிழற்படங்களை போலீசிடம் ஒப்படைக்க ஆயத்தமாகவுள்ளது. அந்தக் காலிகள் முகத்தை மறைத்துக் கொண்டிருப்பதாக மைக்கல் கூறினார்.
பேரணியில் கலந்து கொண்ட சுமார் 400 பேர் “நல்லொழுக்கமும் துணிச்சலும்” கொண்டவர்கள் என்றாரவர்.
umno GANG BUAT PUNYA TAPI DIA TUDUH PKR…………………