நீதித் துறையைக் களங்கப்படுத்துவோர்மீது நடவடிக்கை

cjதலைமை  நீதிபதி  அரிப்பின்  ஜக்கரியா, நீதித்  துறையின் நம்பகத்தன்மையைக்  கெடுக்க  முயல்வோர்மீது   நடவடிக்கை  எடுக்கப்படுமென  எச்சரித்துள்ளார்.

எனவே,   பொதுமக்கள்  சமூக  வலைத்தளங்களில்  நீதித்  துறைக்கு  எதிராக  “ஆதாரமற்ற  குறைகூறல்களை”ச்  சுமத்த   வேண்டாம்  என  அவர் கேட்டுக்கொண்டார்.

“தேவையற்ற  விமர்சனங்கள்  நீதித்  துறைக்குக்  களங்கத்தை  உண்டுபண்ணியுள்ளன.

“இப்படிப்பட்ட  செயல்களை- அவை  நீதிமன்றங்களின்  நன்மதிப்பையும்  நேர்மையையும்  பாதிப்பதால்-  நீதிமன்றம் கடுமையாகக்  கருதுகிறது  என்பதுடன்  நடவடிக்கை  எடுக்கவும்  தயங்காது”, என்றாரவர்.