அம்னோ, பாஸின் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட்டை உண்மையிலேயே மதித்திருந்தால் கடந்த பொதுத் தேர்தலி செம்பகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டிருக்காது என பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் ஹட்டா ரம்லி கூறினார்.
அம்னோ, நிக் அசிசுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் செம்பகா இடைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதன் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறியிருப்பதற்கு ஹட்டா இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார்.
பிஎன், தோ குருவை மதிப்பது உண்மையாகவும் இருக்கலாம் என்று கூறிய அவர், 1967-இலிருந்து அவர் அத்தொகுதியில் போட்டியிட்டு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“அவரை மதிப்பது உண்மையானால், அவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருக்கக் கூடாது.
“அவர்கள் பயப்படுவதாக சொல்லவில்லை. செம்பகாவில் போட்டியிடாமல் போவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். செம்பகாவிலும் பெர்மாத்தாங் பாவிலும் போட்டி வேண்டும்”, என்றாரவர்.
கொள்கையே இல்லாத கட்சி அம்னோ. பதவியும் அதிகாரமும் வேணும்னா உலகத்தில் இல்லாத காரணக்களை எல்லாம் சொல்லுவானுங்க. சுய லாபத்திற்காக எதையும் சொல்லும் செய்யும் சந்த்தர்ப்பவாதிகள்.
தொ பாருடா..சுயலாபத்துக்காக தான் மாமா இன்று உள்ளே போனார்..முதலில் மாங்கா கூட்டனியில் கொள்கை இருக்காநு பாருங்கோ அம்பி..மூன்று கட்சி ..மூன்று முட்டாள் கொள்கைகள்..
BN-னின் 58 வருட ஆட்சியில் முட்டாள்களாக இருந்துவிட்டதால் மற்றவர்களை பார்த்தாலும் முட்டாள்களாக தோன்றுகிறது எங்களை போன்ற BN ஆதரவு முட்டாள் எருமைகளுக்கு. என்ன செய்வது.
செம்பாகா இடைத்தேர்தலில் கண்டிப்பாக நிக் அசிஸ் குடும்பத்தார் போட்டியிட மாட்டார்கள் . ஆனால் பெர்மாத்தாங் பாவில் அன்வார் குடும்பத்தை விட்டால் எங்களுக்கு வேறு வக்கில்லை.
அரசியலில் மதிப்பது என்றால் மிதிப்பது என்று பொருள்!
“BN-னின் 58 வருட ஆட்சியில் முட்டாள்களாக இருந்துவிட்டதால் மற்றவர்களை பார்த்தாலும் முட்டாள்களாக தோன்றுகிறது எங்களை போன்ற BN ஆதரவு முட்டாள் எருமைகளுக்கு. என்ன செய்வது.” என்று சாந்தி எழுதி உள்ளீர்கள். ஏன் தேங்க கூட்டனியை வைத்து முட்டாள்களை கேவல படுத்துகிறீர்கள் ? பழனியும் சுப்ராவையும் ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள், பிறகு முட்டாள்களை கேவல படுத்துங்கள்.