அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி கொடுக்க நஜிப் முன்வந்ததை ரபிஸி உறுதிப்படுத்துகிறார்

 

Anwarjakarta1கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்ததை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி உறுதிப்படுத்தினார்.

துணைப் பிரதமர் பதவியுடன் நான்கு பிகேஆர் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் வழங்குவது அதில் அடங்கும் என்று ரபிளி கூறிக்கொண்டார்.

ஆனால், அப்பதவிகளை அளித்தல் ஓர் “உண்மையாக அளித்தல்” அல்ல ஏனென்றால் டிஎபியும் பாஸ்சும் அதில் இடம் பெறாததால் நஜிப் அதில் முன்னேற்றம் காணவில்லை.

அந்த அளித்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால். அது பாக்கத்தான் ரக்யாட்டை உடைத்திருக்கும்.

தேசிய இணக்கம் ஏற்பட வேண்டுமென்றால் அதில் முழு பாக்கத்தானும் சேர்ந்திருக்க வேண்டும், வெறும் பிகேஆர் மட்டுமல்ல என்பதை அப்போதே அம்னோவுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று ரபிஸி மேலும் கூறினார்.

“(அவர்களுக்கு) தேசிய இணக்கம் வேண்டும் என்றால், அதில் டிஎபியும் பாஸ்சும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அங்குதான் எல்லாமே உடைந்தன.

“அப்போது என் நிலைப்பாடு மிகத் தெளிவாக இருந்தது என்பதை பதிவு செய்கிறேன். அது பிகேஆர் மட்டும் சம்பந்தப்பட்டதாக இருந்திருந்தால், நான் வெளிநடப்பு செய்திருப்பேன். இது பாக்கத்தான் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் அன்வாரும் பிகேஆரும் தொடக்கத்திலிருந்து உறுதியாக நிலைப்பாட்டை கொண்டிருந்தன.

இத்தகவலை அன்வார் பாக்கத்தான் தலைமைத்துவத்திடம் தெரிவித்திருந்தார். அவர்கள் இந்தோனேசிய துணை அதிபர் ஜூசுப் கல்லா மீது வைத்திருந்திருந்த மரியாதையின் காரணமாக அதை இரகசியமாக வைத்திருந்தனர் என்பதை ரபிஸி வலியுறுத்தினார்.

தமது தந்தைக்கு துணைப் பிரதமர் பதவி அளிக்க நஜிப் முன்வந்தது பற்றிய நுருல் இஸ்ஸாவின் அறிக்கையில் குற்றம் கண்ட அமைச்சர்கள் அப்துல் ரஹ்மான் டாலான் மற்றும் கைரி ஜமாலுடின் ஆகிய இருவரையும் இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரியாதவர்கள் என்று ரபிஸி சாடினார்.