அல்தான்துயா கொலை: எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா, யோசிக்கிறார் சிருல்

 

Altanthuyasirul1அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான சிருல் அஸார் ஒமர் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்க ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சிருல் அந்தான்துயா கொலை சம்பந்தமாக நடந்த அனைத்தையும் சொல்லிவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறார்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் சிருல் அனைத்தையும் வெளியிடும் ஒரு நேர்காணல் நடத்துவதற்கு அவரை கேட்டுக்கொண்டுள்ளன என்று சிருல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“நான் நேர்காணல் அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை”, என்று சிருல் கூறினார்.

நேர்காணலுக்கு சம்மதித்தால், அவர் அனைத்தையும் கூறுவதற்கு தயாராக இருக்கிறாரா என்று வினவிய போது, “ஆம், அந்த சாத்தியம் குறித்து நான் தீவிரமாக யோசிக்கிறேன்.”

பல ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனங்கள் சிருலுடன் தொடர்பு கொண்டுள்ளன என்பது மலேசியாகினிக்கு தெரியும்.

இருப்பினும், அவற்றுக்கும் சிரிலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

“நான் உத்தரவுப்படி நடந்தேன்”

இதனிடையே, தமக்கு கொலை செய்யப்பட்டவரை மற்றும் அப்துல் ரசாக் பஹிண்டா, அரசியல் ஆய்வாளரும் நஜிப்பின் நண்பர், ஆகியோரைAltanthuyasirul2 தெரியாது என்று சிருல் கூறினார்.

“எனக்கு உத்தரவு இடப்பட்டிருந்தது. (அல்தான்துயாவை கொலை செய்வதற்கான) நோக்கம் கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கின்றனர்”, என்று மலேசியாகினியிடம் கூறிய சிருல் அதற்கு மேல் எதுவும் கூற மறுத்து விட்டார்.

43 வயதான சிருல் இரு குழந்தைகளுக்கு தந்தையாவார். கேள்விக்கு பதில் அளித்த சிருல் தாம் நலமாக இருப்பதாகவும், வழக்கமாக மலேசியாகினி, உத்துசான் (மலேசியா) மற்றும் ஹராக்கா ஆகியவற்றை படிப்பதாக தெரிவித்தார்.

“பலிகடா”

அல்தான்துயா கொலை வழக்கு ஷா அலாம் உயர்நீதிமன்றத்தில் நடந்த போது “தங்களுடையத் திட்டங்களை பாதுகாப்பதற்கு” தம்மை பலிகடாவாக்கியுள்ளனர் என்று கூறி சிருல் ஒரு சலசலப்பை உண்டாக்கினார்.