அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்தார் என்பதை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில், பாக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் அது குறித்து வேறுபட்ட பதிலை கூறுகின்றனர்.
தொடர்பு கொண்ட போது, டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை என்றார். அக்கட்சியின் இடைக்கால தலைவர் டான் கோக் வாய் அவ்விவகாரம் குறித்த விபரங்கள் என்ன என்று உறுதியாக கூற இயலாது என்றார்.
பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி, “அது பற்றி நான் ஒன்றும் அறியேன்”, என்று மலேசியாகினியிடம் கூறினார்.
பார்க்கத்தான் பங்காளிகள்! உள்ளுக்குள் சண்டா(ளர்)ளிகள்!
பார்க்கத்தான் பங்காளிகள்! ம்ம் ,பங்காளிகளை நம்பாதீர்கள் ,அதிலும் DAP ,PSA ஒரு விச கிருமிகள் .