ஒரு புகார்மீது விசாரணை நடத்த போலீசுக்குப் “போதுமான ஆதாரங்கள்’ தேவை என்று இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் கூறுகிறார்.
குற்றவியல் நடைமுறை விதி, பிரிவு 110(1) (பி) அதை வலியுறுத்துகிறது- என்றாரவர்.
“வெறுமனே குற்றம் கூறுவது மட்டும் போதாது. ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட செய்தியை அடிப்படையாக வைத்து டிஏபி புகார் செய்துள்ளது. அவ்வளவுதான்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
விசாரிப்பது உந்தன் வேலை .!
உன் சம்பளம் மக்கள் வரி பணம் ….!
“சிருல் பேசும் வரையில் அல்தான்துயா பற்றிய புதிய விசாரணை இல்லை – ஐஜிபி 18 FEB 2015
அதுதான் சிருல் பேசிட்டாரே புதிய விசாரணையை தொடங்குவதுதானே அது முடியா விட்டால் என்ன (***) “ஐஜிபி” நேற்று அப்படி சொன்னார் என்று மக்கள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள்.
முன்னாள் போலீஸ் அதிரடிப்பிரிவு வீரரான சிருலின் குற்றச்சாட்டுக்கு “போதுமான ஆதாரங்கள்” தேவை என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்
போலீஸான நீங்களே கூறுவதை பார்த்தால் “அனைத்து போலீஸ்காரர்களும்” பொய் பேசுபவர்கள் என்றல்லாவா நினைக்க தோன்றுகிறது.
நாடு உலகமே பார்த்து சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது. இவன் பேசியதெல்லாம் ஒரு கதையா. பிரதமர் ஐயா, சிருள் என்ன பேசப் போறான் என்று தெரியாமலே அவன் உலருகிரன்னு சொல்றான். அப்படினா, பிரதமருக்கு சிருள் என்ன பேசப் போறான்னு தெரியுமோ?
ஆஸ்திரேலியா முழுவதும் அல்தாந்துயா கொலை வழக்கு பற்றிய பேச்சுதானாம். அதிலும் ஆஸ்திரேலிய மக்களிடையே மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கும் முக்கிய பிரமுகர் நமது பிரதமர் நஜிப் என்று கேள்வி பட்டவுடன் உடம்பு புல்லரித்து விட்டது.
அடேய் சாந்தி ……….மவளே …………பயங்கரமா அனுபவிச்சி பேசுவது போல உள்ளதே
எல்லாமே நன்றாக திட்டமிடப்பட்ட கதை அம்சமே!!! பணம் போட்டவர் தயாரிப்பாளர். அவர் சொன்ன வழியே திரைக்கதை தொடங்கி முடிய வேண்டும்.!!! ஆதாரம் வேண்டுமாம்.. ஆதாரம். ஆதாரம் என் வீட்டு (கக்கூசில்) கழிவறையில் இருக்குமோ ???
ஜீன் பிரேராவின் வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும், வழக்கு மறுபடியும் திறக்கப்பட்டு நிரபராதி விடுவிக்கப்பதும் இந்நாட்டின் சட்டத்தின் கீழ் தானே??? உண்மை குற்றவாளியும் தண்டிக்கப்பட்டாரே!!!
மலேசியாவின் பிரமாண்டமான தியேட்டரை அதிரவைக்கும் “அல்தான்துயாவும் அற்புத வெடிகுண்டும் – C4” திரைப்படத்தை உலகமெங்கும் வெளியிட உள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.
படத்தின் சிறப்பம்சம் உண்மையான நீர்முழ்கி கப்பல், மங்கோலிய மாடல் அழகியை நிஜமாகவே படுகொலை செய்வது, குற்றவாளி நாட்டை விட்டு ஆஸ்திரேலியாவுக்கு தப்பிப்பது போன்ற காட்சிகள் தத்ருபமாக எடுக்கப்பட்டு இறுதியில் கதாநாயகன் வில்லனா அல்லது வில்லன் கதாநாயகனா என்பதுதான் கிளைமாக்ஸ் காட்சியாம்.
ஐஜிபி சார், நீங்கள் எப்படி ஜுஜுபி செய்திகளை வைத்தெல்லாம் நடவடிக்கை எடுக்கிறீர்களோ அதே போலத்தான் டிஏபி யும் செய்கிறார்கள்! ஒரு வித்தியாசமும் இல்லை!