எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு பற்றி தெரிவித்த கருத்திற்காக பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செலவம் தேச நிந்தனைக்காக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இன்று மாலை சுமார் 10 போலீஸ்காரர்கள் காஜாங்கில் அருட்செல்வத்தின் வீட்டை திடீர்ச்சோதனை செய்து அவரின் கணினியை கைப்பற்றினர்.
இத்தீடீர்ச்சோதனையின் போது மலேசியாகினியிடம் பேசிய அருட்செல்வம் போலீசார் தம்மை டாங்வாங்கி போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்வர் என்று கூறினார்.
அருட்செல்வத்தின் அலைபேசி மற்றும் மோடம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர் என்று பின்னர் தொடர்பு கொண்ட போது பிஎஸ்எம்மின் கோகிலா கூறினாரர்.
தேச நிந்தனைச் சட்டம் செக்சன் 4(1)(c) இன் கீழ் அருட்செல்வம் விசாரிக்கப்படுகிறார் என்று கோகிலா மேலும் கூறினார்.
இந்த விதியின் கீழ் தேச நிந்தனையானவற்றை எழுதுவது, வெளியிடுவது, விற்பது, விற்பனைக்கு வைப்பது, விநியோகம் செய்வது அல்லது மறுபதிப்பு செய்வது குற்றமாகும். அதற்காக ரிம5,000 வரையில் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
“இக்கைது அன்வார் சிறையிலடைக்கப்பட்ட தினத்தில் அருட்செல்வம் வெளியிட்ட ஓர் அறிக்கை சம்பந்தப்பட்டதாகும்”, என்று அவர் கூறினார்.
இன்றிரவு விழிப்பு நிலை அனுசரிக்கப்படும்
கடந்த பெப்ரவரி 10 இல், குதப்புணர்ச்சி குற்றத்திற்காக அன்வாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனை “எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி ஓர் அரசியல் தீர்ப்பாகும்” என்று அருட்செலவம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அருட்செல்வதற்கு ஆதரவு தெரிவிக்க இன்றிரவு ஆதரவாளர்கள் டாங்வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வெளியில் ஒரு விழிப்பு நிலை கூட்டத்தை நடத்துவார்கள் என்று கோகிலா தெரிவித்தார்.
குதப்புணர்ச்சி வழக்கு 2 சம்பந்தமாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்காக செய்யப்பட்ட இரண்டாவது கைது இதுவாகும்.
பெப்ரவரி 11 இல், அரசியல் கேலிச்சித்திரக்காரர் ஸூனார் அந்த தீர்ப்புக்குப் பின்னர் நீதிபதிகளை “மேலங்கியில் கையாள்கள்” என்று செய்திருந்தத டிவிட்டுக்காக தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மூன்று நாள்களுக்கு அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரமலி மற்றும் பேராக் டிஎபி தலைவர் இங்கா கோர் மிங் ஆகியோர் வெளியிட்ட டிவிட்டுகளுக்காக அவர்களை விசாரிப்பதற்கு ஐஜிபி காலிட் அபு பாக்கார் உத்தர விட்டுள்ளார்.
அக்கிரமும் அநீதியும் தாண்டவமாடுகின்றன. ஆனால் நீடிக்காது.
ISA எனப்படும் உள் நாட்டு பாதுகாப்பு சட்டத்தையும் இன்னும் உள்ள தேச நிந்தனை சட்டங்கள் அனைத்தையும் அரசு நீக்கம் செய்யும் என்று உறுதியளித்த பின் இது போன்ற கைது நடவடிக்கை மலேசியாவில் அரசியல் அமைப்பில் உள்ள 10வது உறுப்பில் குடிமக்களுக்கு உள்ள பேச்சு உரிமை மற்றும் சிந்தனை வெளியீட்டு சுதந்திரம் ஆகியவற்றை பரிக்கும் செயலாகும்.
நான் ஒரு INSPECTOR GARBAGE OF POLIS என்பதை திரும்ப திரும்ப நிருபித்து கொண்டே இருப்பதற்கு நன்றி.
இவன்களின் அநியாயங்களை கேட்பவர்கள் எல்லாருக்கும் தேச நிந்தனை தான்- ஆட்சியில் எப்போதுமே உட்கார்ந்து இருக்க அம்னோவும் அதன் கூலிப்படைகளுக்கும் இதன் வழியாகவே உட்கார்ந்து தின்ன முடியும்.
ggp க்ஹலிட் ……….. இல்லாத ……..இவனெல்லாம் …………. பேதலித்து போயி இருக்கிறான்…………..
அரண்டு மருண்டு இருப்பவர்கள் வேறென்ன செய்ய முடியும்?? இயன்றவரை அறிவாளிகளை அடக்கத்தான் முயல்வார்கள்… ஆனால், எவ்வளவு காலம்??? உண்மை வெல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை!!! பெரும்பாலான மக்கள் விழித்துக்கொண்டனர்…ஒரு சிலரே கிடைப்பதை தின்னுவிட்டு கும்ப கர்ணன் அருகில் தூங்குவதுபோல் நடிக்கின்றனர்…