நேற்று கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் இன்று விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருட்செல்வத்தை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு தேவைப் படும் நீதிமன்ற தடுப்புக்காவல் உத்தரவை வழங்க நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.
மஜிஸ்திரேட் முஸ்லினா முகம்மட் ஜமி போலீசாரின் மனுவை நிராகரித்து விட்டார், ஏனென்றால் அருட்செல்வத்தை விசாரிக்க இன்று மாலை மணி 7.00 வரையில் நேரம் இருக்கிறது. அது போதுமானதாகும்”, என்று நீதிபதி கூறினார்.
அருள் என்று அழைக்கப்படும் அருட்செல்வம் தற்போது கோலாலம்பூர் டாங்வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அருட்செல்வன் சில நாட்கள் விசாரணையின்றி ‘உள்ளே’ இருப்பது நல்லது. நல்ல போராட்டவாதி. ‘உள்ளே’ சிறிது காலம் இருந்தால்தான் ‘அரசியலில்’ பேர் போடலாம்.
திடீர்னு …..சிங்கம் பின்னால இருந்து முகருகிறது ஏன் ?
அருள்செல்வன் போன்ற போராட்டவாதிகள் நேர்மைக்கும் நியாயத்திற்கும் போராடுபவர்கள், சிலரைபோன்ற வேடம் போடும் போலிகள் அல்ல எங்கிருந்தாலும் நியாயமே அவர்களது குறிக்கோள்.
‘உள்ளே’ சிறிது காலம் இருந்தால்தான் ‘அரசியலில்’ பேர் போடலாம்’ உள்ளே போனவன் எல்லாம் காந்தி ஆக முடியாது அப்பு…