அருட்செல்வம் விடுவிக்கப்பட்டார்

 

psmarulrleased3நேற்றிரவு கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் இன்று பின்னேரத்தில் விடுவிக்கப்பட்டார்.

போலீசார் அவரை மேற்கொண்டு தடுத்து வைக்க முன்வைத்த கோரிக்கையை இன்று காலையில் மஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. போலீசார் அவரை விசாரிக்க இன்று மாலை மணி 7.00 வரையில் அவகாசம் இருக்கிறது. ஆகவே கூடுதல் தடுப்புக்காவல் தேவையில்லை என்று நீதிபதி கூறினார்.

கோலாலம்பூர் டாங்வாங்கி போலீஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் மாலை மணி 5.40 க்கு விடுவிக்கப்பட்டார்.
அங்கு குழுமியிருந்த அவரது வழக்குரைஞர்களும் ஆதராவாளர்களும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

தமக்கு எதிராக போலீஸ் புகார் செய்தது போலீஸ்தான். பொதுமக்கள் அல்ல. அவர்கள் ஏன் என்னை கைது செய்ய வேண்டும். என்னை கேட்டிருந்தால் நானே போலீஸ் நிலையத்திற்கு வந்திருப்பேன் என்று அருட்செல்வம் அவரது கருத்து பற்றி கேட்ட போது கூறினார்.

நேற்று பத்து போலீஸ்காரர்கள் அருட்செல்வத்தின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்தனர்.