அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் அது பற்றிய அனைத்தையும் தொலைக்காட்சி நேர்காணலில் கூற அனுமதிக்கக் கூடிய சாத்தியத்தை ஆஸ்திரேய குடிநுழைவுத்துறை நிராகரிக்கவில்லை. ஆனால், அதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியது.
“பொதுவாக நேர்காணல்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் நடவடிக்கை காரணங்களுக்காக அனுமதிக்கப்படுவதில்லை”, என்று குடிநுழைவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் பேச்சாளர் ஆஸ்திரேலியாவின் த ஏஜ் நாளிதழிடம் கூறினார்.
சிருலுடனான நேர்காணலுக்கு அந்த இலாகா இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அப்பேச்சாளர் கூறினார்.
சிருல் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் வழங்க உயர்மட்ட அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று த ஏஜ் செய்தி கூறுகிறது.
வெள்ளை காக்காவுக்கு கருப்பு பூசுவதும் கருப்பு காக்காவுக்கு வெள்ளை அடிப்பதும் தான் சட்டம் ,அரசியல் …போலிஸ் …சிலருக்கு பூசனும் சிலருக்கு அடிக்கணும் இதுதான் வித்தியாசம்.
நேர்காணலா ,,அதெல்லாம் நடக்காது ,ஆஸ்திரேலியா பிரதமரும் நம் பிரதமரும் நல்ல நட்பு உடையவர்கள் ,,அப்படியே உண்மையை மூடி மறைத்து விடுவார்கள் .
உங்கள் நாட்டில் எது முடியாது என்கிறீர்களோ அது எங்கள் நாட்டில் முடியும் என்பது தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்!
எங்களூரில் வராத உண்மை வெளியூரில் ஆவது வெளிச்சம் போடட்டுமே!!!!
ஆஸ்திரேலியா சட்டம் ம்ட்டும்தான் பேசும், அரசியல் 0 தான். நாம கேம் மை பார்போம். மலேசியாவுக்கு சட்டம் என்ன என்பதை விளங்க படுதிருவங்க.
இதெல்லாம் சொல்லிட்டு செயக் கூடாது. இதற்கும் சதி செய்யப்படலாம்.
நீயும் நானும் நண்பர்களே!!! நீ என் முதுகைச் சொரி. நான் உன் முதுகைச் சொரிகிறேன். பணம் பாதாளம் வரை பாயும் இந்த புது திருப்பத்தில்.