இன்று நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் மற்றும் பாஸ் தகவல் பிரிவு தலைவர் மாபுஸ் ஒமாருக்கு இடையிலான டெலியுரையாடல் சிருல் தாம் தற்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றதால் பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது.
“நான் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பதால் நான் ஆஸ்திரேலிய அரசின் அதிகாரத்திற்கு முழு மதிப்பளிக்கிறேன். நான் ஆஸ்திரேலியாவை மதிக்க வேண்டிய தேவை உள்ளது. நான் இப்போதைக்கு அறிக்கை எதுவும் வெளியிட விரும்பவில்லை. ஆனால், நான் தகுந்த நேரத்தில் ஓர் அறிக்கை வெளியிட முயற்சிப்பேன்.
“எனது செய்தியை வெளியிட்ட மலேசிய ஊடகங்களுக்கு நன்றி கூறுகிறேன். எனக்கு பாதுகாப்பும் இதர வசதிகளையும் அளித்து வரும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று சிருல் கூறினார்.
மேற்கூறியவற்றை சிருல் கூறி முடித்ததும் சிருலுடலான தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவரிடம் கேள்வி எதுவும் கேட்க முடியவில்லை.
மாபுஸ் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு முயன்றும் சிருலுடன் தொடர்பை ஏற்படுத்த இயவில்லை. இதன் பின்னர் அவர் தமது முயற்சியை கைவிட்டார்.
மாபுஸ் ஆஸ்திரேலியாவுக்கு போகிறார்
எனினும், தாம் அடுத்த வாரம் சிருலை சந்திக்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லப் போவதாக மாபுஸ் கூறினார். அவருடன் சிருலின் 74 வயது தாயாரையும் அழைத்துச் செல்ல இருப்பதாகவும் அது குறித்த தகவல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும் மாபுஸ் கூறினார்.
அல்தாந்துயா கொலை வழக்கில் பதில் கிடைக்காத ஆயிரக்கணக்கான கேள்விகள் குவிந்துள்ளன. இவ்வழக்கு மீண்டும் விசாரனைக் குட்பட்டால், நமது நீதித்துறை மதிக்கப்படும். இல்லையேல் உலக அரங்கில் நாம் மிகவும் கீழ் நிலைக்கு தள்ளப்படுவோம்.
நம் நாட்டு நீதிபதிகளை நினைத்தால் வடிவேலு, விவேக், சந்தானம் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஆம்! மரணக் கைதியான சிருளைக் காண மாபுஸ், சிருளின் தாயார், என யார் யாரோ சென்று காண்கிறார்கள். ஆனால், இங்குள்ள ஒரு போலீஸ் அதிகாரி, ஆஸ்திரேலியா சென்று, அவரை கைது செய்து இங்கே கொண்டு வர முடியவில்லை. நல்ல ஜோக் போங்க!
ஆஸ்திரேலியா சட்டம் தெரியாம பாஸ் ஆடுது. அரசியல்வதிகள் அங்கு தலை iduvatu கூடாது. ஆஸ்திரேலியா siirulukku உயிர் பாதுகாப்பு என்பது இவனுக்கு தெரிலே.
MH 370 விமான தேடலில் இருந்து வெளியேறஆஸ்திரேலியா சிருலை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துகிறது. MH 370 விமான தேடலில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறிவிட்டால் மாஸ் நிறுவனமும் மலேசிய அரசாங்கமும் ஊ(***)தான்
யார் வேண்டுமானாலும் கொலைக் குற்றம் செய்வதற்கு முன்பே நன்கு திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, கொலை செய்தபின் ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிடலாமா??? தூக்குத்தண்டனை என்றால் ஆஸ்திரேலியா அவர்களை பாதுகாக்கும் அல்லவா????