அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு 2 ஐ உச்சநீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகத்தை பிரதிநிதித்து நடத்திய அம்னோ சார்புடைய வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா மேற்கொண்ட பிரச்சாரங்கள் எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது என்று ஒரு மூத்த அம்னோ தலைவர் ஒப்புக்கொண்ட்டுள்ளார்.
பெயரை வெளியிட விரும்பாத அத்தலைவர் அப்பிரச்சாரத்திற்கு அம்னோ அனுமதி அளிக்கவில்லை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
“இந்த விவகாரம் அம்னோ தலைமையகத்தில் அதன் மத்திய நிருவாகக் குழுவினால் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
“இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன். இந்த நடவடிக்கை எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரம் பகிரங்கமாக, மிகத் துள்ளிதமாக விவாதிக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் (டாக்டர்) வான் அஸிசா வான் இஸ்மாயில் மற்றும் அவருடைய குழந்தைகள் மீது அனுதாபம் காட்ட வேண்டும்”, என்று அந்த அம்னோ தலைவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இதில் அம்னோவுக்கு எந்தப் பங்கும் இல்லை; அதனை ஆதரிக்கவும் இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அந்த தலைவர் கூறினார்.
இப்பிரச்சாரங்களை உண்மையான நண்பர்கள் (பிஎப்எப்) என்ற அரசு சார்பற்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பிற்கு பிரதமர்துறை துணை அமைச்சர் ரஸாலி இப்ராகிம் தலைமை ஏற்றுள்ளார்.
“இதில் அம்னோ சம்பந்தப்படவில்லை. அம்னோவில் பதவி வகிக்கும் குட்டித் தலைவர்கள் அவரையும் (ரஸாலியை) பிஎப்எப்பையும் தூண்டி விடுகின்றனர். இந்தப் பிரச்சாரம் அரசு சார்ப்பற்ற அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.
பிஎப்எப் இளம் வழக்குரைஞர்களை அம்னோவில் சேர கவர்வதற்கென்றே விசேசமாக தோற்றுவிக்கப்பட்டது என்றாரவர்.
ஷாபியின் பிரச்சாரம் எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டதா ?
எப்படி குதப்புணர்ச்சி போலவா ?
குதப்புணர்ச்சியில் நிபுணுத்துவம் பெற்றவர் யாரென்று இப்பொழுதாவது புரிகிறதா ? எருமைகளே !!!
தண்டனை பெற்ற ஒருவரை பற்றி இப்படி தரக்குறைவாக பிரசாரம் செய்வதை அனுமதித்த போலிஸ் தலைவரும் சட்ட துறை தலைவரும், இனி அப்பதவியில் இருக்க தகுதி இல்லாதவர்கள்…. ஆகவே அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய மாமன்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் …..