முஸ்லிம் சிறுவன்: தந்தைக்கு எதிராக போலீஸ் புகார் செய்ய கட்டாயப்படுத்தப் பட்டேன்

 

muslimboy1ஒரு 14 வயது பள்ளி மாணவனை அவனது தந்தைக்கு எதிராகப் போலீஸ் புகார் செய்யும்படி அவனை பரோயில் ஓர் இஸ்லாமிய சமய மையத்தின் அறை ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைத்திருந்ததாக அச்சிறுவன் கூறினான். அச்சிறுவனின் இரு ஆசிரியர்கள் அவனின் இந்து தந்தை அவனை இஸ்லாமிய சமயத்திலிருந்து இந்துவாக மாற்ற முயற்சிப்பதாக போலீஸ் புகார் செய்யுமாற அச்சிறுவனை கட்டாயப்படுத்தினர்.

போர்ட்டிக்சன், லுக்குட் எஸ்எம்கே ராஜா ஜூமாஆட் பள்ளி மாணவனான எஸ். தியாக்குருடீன் தன்னை பெப்ரவரி 13 இல் பள்ளியிலிருந்து இரு முஸ்லிம் ஆசிரியர்கள் அழைத்து சென்று தமக்கு “மந்திர தண்ணீர்” கொடுத்த பின்னர் போலீஸ் புகார் ஒன்றில் கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கினர் என்று அவனது போலீஸ் புகாரில் கூறியுள்ளான்.

தம்மை பரோயிலுள்ள ஒரு சமய மையத்திற்கு கொண்டு சென்று அங்கு இஸ்லாமிய விவகார இலாகா அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டேன்  என்று அச்சிறுவன் கூறினான். இறுதியாக, அவனது தந்தை அவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவனை காப்பாற்றியுள்ளார்.

எஸ். தியாக்குருடீன் என்ற அச்சிறுவனின் மைகாட் அடையாள அட்டையில் அவன் முஸ்லிம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளான். ஆனால், அவனது தந்தை ஓர் இந்து. தாயார் ஓர் இந்தோனேசிய முஸ்லிம்.

அச்சிறுவனின் தந்தை, எஸ். கணேசன் அவனது பெயரை மாற்றுவதற்காக ஷரியா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். ஆனால், அதற்கு அச்சிறுவனின் ஒப்புதலைப் பெறுவதற்கு அவன் 18 வயதை அடையும் வரையில் அவர் காத்திருக்க வேண்டும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

தியாக்குருடீன் செய்திருந்த போலீஸ் புகாரின் நகலை பிகேஆர் மனித உரிமைகள் மற்றும் சட்டக் குழு துணைத் தலைவர் எஸ். ஜெயதாஸ் மலேசியாகினிடம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மலேசியாகினி கணேசனுடன் தொடர்பு கொண்டது.

 

இந்து, முஸ்லிம், மீண்டும் இந்து

 

கணேசனின் கூற்றுப்படி, அந்த இரு ஆசிரியர்களும் அவரது மகனை கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கிய போலீஸ் புகாரில் அச்சிறுவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறுவதை உறுதி செய்வதற்வகாக தாம் அவனை 2012 ஆம் ஆண்டிலிருந்து உடல் ரீதியாக துன்புறுத்தியதாக அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

“இன்று வரையில், ஏன் அந்த ஆசிரியர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர் என்பதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் நான் அப்பள்ளியிலிருந்து பெறவில்லை”, என்று கணேசன் வருத்தமுடன் மலேசியாகினியிடம் கூறினார்.

கணேசன் முன்னதாக இஸ்லாத்திற்கு மாறியவர். 1982 ஆம் ஆண்டில் அவர் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட போது முஸ்லிமாக மதம் மாறினார். ஆனால், 1987 ஆம் ஆண்டில் அவரும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் சமயம் மாறுவதற்காக செய்து கொண்ட மனுவில் வெற்றி பெற்றார்.

அவரது இரண்டாவது மனைவி, இந்தோனேசிய முஸ்லிம், அவரை விவாகரத்து செய்து விட்டு அவர்களின் இரண்டாவது குழந்தையோடு அவர் இந்தோனேசியாவுக்கு சென்று விட்டார். அத்தம்பதிகளின் முதல் குழந்தையான தியாக்குருடீன் அப்போதிருந்தே அடையாள அட்டை மற்றும் பிறப்புப் பத்திரம் ஆகியவை பற்றிய பிரச்சனையில் சிக்கியுள்ளான்.

தியாக்குருடீன் செய்துள்ள போலீஸ் புகாரில் தாம் பள்ளியிலிருந்து காலை மணி 10.00 க்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் லுக்குட் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அங்கு தனது தந்தைக்கு எதிராக புகார் செய்யக் கூறப்பட்டதை கூறியுள்ளான்.

அதன் பின்னர், பிற்பகல் மணி 1.30 க்கு பரோய் சமய மையத்திற்கு இட்டுச் செல்லப்பட்டு அங்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் 8 அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டான். பின்னர், அவனை அங்கேயே தனியாக விட்டு விட்டனர். மாலை மணி 7.00 அளவில் அவனது தந்தை அவனை தேடிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

 

ஆசிரியர்களா, சமய அதிகாரிகளா?

 

தமக்கு கிடைத்த தகவலைக் கொண்டு தமது மகனை கண்டுபிடித்ததாக கணேசன் கூறினார்.

அந்த இரு ஆசிரியர்களை எதிர்கொண்ட போது, அவர்கள் இருவரும் அவரது மகனை எங்கேயோ அவர்கள் கூட்டிச் சென்றனர் என்றுmuslimboy3 கூறுவதை மறுத்தனர் என்று கணேசன் கூறினார்.

muslimboy2“அச்சம்பவம் நடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, நான் எனது மகனுக்கு இஸ்லாமிய பாடங்கள் போதிக்க வேண்டாம் என்ற எனது கோரிக்கையை பள்ளி ஏற்றுக்கொண்டது. இதற்கு முன்பாக நான் அச்சிறுவனின் தகுதி மற்றும் நிலைமையை அவர்களுக்கு விளக்கி கூறியிருந்தேன்”, என்று கணேசன் மேலும் கூறினார்.

தமது மகனுக்கு ஏற்பட்ட துன்பம் குறித்து தாம் பெப்ரவரி 13 இரவில் லுக்குட் போலீஸ் நிலைத்தில் புகார் செய்ததாகவும், தமது மகன் தியாக்குரூடீன் அவனது புகாரை பெப்ரவரி 17 இல் சிறம்பான் போலீஸ் நிலையத்தில் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தந்தையின் அனுமதியின்றி அச்சிறுவனை வெளியில் கொண்டு சென்றது மூலம் அந்த ஆசிரியர்கள் “தவறான முறையில்” நடந்து கொண்டுள்ளனர் என்று ஜெயதாஸ் கூறினார்.

“இந்நாட்டில் விதியும் சட்டமும் இருக்கிறது. ஆசிரியர்கள் சமய அதிகாரிகளாக நடந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை”, என்றாரவர்.