ரோஸ்சுக்கு எதிராக மஇகா வழக்கு தொடர்ந்துள்ளது

 

micமஇகாவுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவுகளை சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) திரும்பப்பெற வேண்டும் எனக் கோரும் வழக்கு நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை மஇகாவின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் அதன் வியூக இயக்குனருமான ராமலிங்கம் சங்கங்களின் பதிவகம் மற்றும் அதன் தலைமை இயக்குனர் முகம்மட் ராஸின் அப்துல்லா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரோஸ் மஇகாவுக்கு அனுப்பியுள்ள உத்தரவுகள் தீயநோக்கம் கொண்டவை என்பதோடு அவை அதன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்று ராமலிங்கம் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் செல்வம் சண்முகம் மற்றும் பார்ட்னர்ஸ் என்ற வழக்குரைஞர் நிறுவனம் பதிவு செய்தது.