அடுத்து, வன்புணர்ச்சியில் ஈடுபடுவோர் அரச மன்னிப்பு கோருவார்கள், அப்படித்தானே

puadகுதப்புணர்ச்சி  வழக்கில்  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  வ்திக்கப்பட்ட அன்வார் இப்ராகிமுக்கு  அரச மன்னிப்பு  நாடுவது   மலேசிய  நீதிமுறையைக் களங்கப்படுத்தியுள்ளதாம். அம்னோ  தலைவர் ஒருவர்  கூறுகிறார்.

“குதப்புணர்ச்சியில்  ஈடுபட்டவர்  எப்படி அரச  மன்னிப்பு  கோரலாம்?”, எனக் கேள்வி  எழுப்பியுள்ளார்  புவாட் ஜார்காஸி,

“அவருக்கு  மன்னிப்பு  வழங்கப்பட்டால்  அது  தவறான  முன்மாதிரி  ஆகிவிடும். அதன்  பின்னர்  குதப்புணர்ச்சியில்  ஈடுபடுவோரும்  கற்பழிப்பில்  ஈடுபடுவோரும்கூட  அரச  மன்னிப்புக்கு  மனுச்  செய்வார்கள்”.

மரண தண்டனை  அல்லது  ஆயுள்  தண்டனை  விதிக்கப்பட்டோர்தான் மன்னிப்புக்கு  மனுச்  செய்வது  வழக்கம் என்று  குறிப்பிட்ட  அந்த  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர், அன்வாரை  ஒரு  “கோழை” என  வருணித்தார்.

“இது  ஐந்தாண்டுதான். அதற்கு  அரச மன்னிப்பை  நாடுகிறார்.  அன்வார் ‘lawan tetap lawan’ (சரணடைய  மாட்டேன்) என்று  கூறியதெல்லாம்  வெறும்  வாய்ச்சவடால்போலும்”, என்று  புவாட்  கூறினார்.