முஸ்லிம் என்ற அடையாள அட்டையைக் கொண்ட தியாக்குருடீன் என்ற ஓர் இரண்டாம் பார மாணவனை அவனது இந்து தந்தைக்கு எதிராக போலீஸ் புகார் செய்யுமாறு துன்புறுத்தப்பட்ட விவகாரம் குறித்து போர்டிக்சன் மாவட்ட கல்வி இலாகா விசாரனையை மேற்கொண்டுள்ளது.
“நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டோம். நாங்கள் இப்போது இவ்விவகாரம் பற்றிய ஆசிரியர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது நெகிரி மாநில கல்வி இலாகாவுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று பெயர் கூற விரும்பாத ஓர் அதிகாரி கூறினார்.
அச்சிறுவனின் தந்தை எஸ். கணேசன் ஒன்றை கூறுகிறார். ஆசிரியர்கள் வேறொன்றை கூறுகின்றனர். அச்சிறுவனை “ஆயர் பெனவார்’ குடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதை ஆசிரியர்கள் மறுத்துள்ளனர் என்று அந்த அதிகாரி மலேசியாகினியிடம் கூறினார்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தாம் ஓர் அரசாங்க பணியாளர் என்பதால் இது குறித்து கருத்துக் கூற இயலாது என்று பின்னர் தொடர்பு கொண்ட போது கூறினார்.
இரு அரசாங்கப் பணியாளர்கள் ஒரு மாணவனை வற்புறுத்தி தனது தந்தைக்கு எதிராக போலிஸ் புகார் செய்வதை எந்தச் சட்டமும் தடுக்க முடியாது என்பது மட்டும் உண்மை. குடும்பங்களைப் பிரிப்பது சமயங்களின் உரிமை! வாழ்க!
என்ன ? கல்வி இலாகா விசாரிக்க போகிறதா ? நிசமாலுமா ! உண்மையாகவா !! துணை கல்வி அமைச்சர் கமலநாதன் சொன்னாரா ?ஐயோ !ஐயோ!! ஐயோ !!!