அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டதைக் கண்டிக்க மார்ச் 7ஆம் தேதி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்-கின் பதவி விலகலுக்கும் கோரிக்கை விடுக்கும்.
இதனைத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதற்கு அல்டான்துன்யா ஷரிபு-வின் கொலை, முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரர் சிருல் அஸ்கார் உமர் ஆகக் கடைசியாக வெளியிட்ட தகவல்கள் உள்பட 12 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.
#KitaLawan என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அக்குழு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறது.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை சனிக்கிழமைதோறும் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
போச்சிடா….தெரு ஆர்பாட்டமா..சரி சரி இப்படியாவது மாங்கா கூட்டனி ஒற்றுமையாக இருக்கட்டும்..
செவிடன் காதில் ஊதிய சங்குதான் !
அரசியல் லாபத்துக்காக பொது மக்களை சிரமப்படுட்டாதீர்……
“அல்தான்துயாவும் அற்புத வெடிகுண்டும் – C4”
சாந்தியின் வருணனையின் விளைவு, கிளைமாக்ஸ் காட்சியை காணும்வரை விட மாட்டார்கள்போல் தெரிகிறது.
கிளைமாக்ஸ்..உள்ளே இருக்கும் மாமாவுக்கு மச்சி….