குவாந்தான் பாஸ் இளைஞர் பகுதி அனுப்பிவைத்த ஒரு மகஜர்மீது கட்சி ஒழுங்குக் குழு விசாரணை நடத்த வேண்டும் என கிள்ளான் பாஸ் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
குவாந்தான் பாஸ் இளைஞர் தலைவர் நூர்ஸஸிலாவாட்லி இப்ராகிம் பிப்ரவரி 8-இல் அனுப்பிவைத்த மகஜர், கட்சித் தலைவர்கள் சிலர் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி யிருந்தது என கிள்ளான் பாஸ் செயலாளர் முகம்மட் பிரசாத் ஹனிப் கூறினார்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும் அது கூறியது.
“கட்சியின் ஒருமைப்பாட்டுக்காக புகார்தாரர்கள்மீதும் மகஜரில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்மீதும் விசாரணை நடத்த வேண்டும் என விரும்புகிறோம்”, என்றவர் கூறினார்.