பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று சரவாக்குக்கு மூன்று-நாள் வருகையைத் தொடங்குகிறார். அவரது வருகையை ஒட்டி திட்டமிடப்பட்டிருக்கும் விரிவான நிகழ்வுகள் அம்மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளன.
நஜிப்புக்காக திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்வுகளும் பிஎன் தலைவர்களின் பேச்சும் அங்கு தேர்தல் முன்கூட்டியே நடக்கலாம் என்பதற்குக் கட்டியம் கூறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இப்போதைய சட்டமன்றம் அடுத்த ஆண்டு ஜூன்வரை இருக்கலாம். ஆனால், பலர் செப்டம்பரில் தேர்தல் நடக்கலாம் என்று நினைக்கின்றனர்.
























