செம்பாகா இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற அம்னோவின் முடிவை வரவேற்ற பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார், அம்னோ தேசிய தேர்தல் உள்பட எல்லாத் தேர்தல்களிலுமே போட்டியிடாதிருந்தால் இன்னும் நல்லது எனக் கேலி செய்தார்.
அம்னோ, முஸ்லிம் சமூகம் பிளவுபடுவதை விரும்பவில்லை என்று கூறியதிலிருந்து பிளவுக்கு அது காரணமாக இருந்திருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது.
“அதனால், இனி வரும் தேர்தல்களில், தேசிய தேர்தல் உள்பட, அம்னோ போட்டியிடாது என பாஸ் எதிர்பார்க்கிறது”, என்றாரவர்.
வேண்டுமானால் அரசியலுக்கு வெளியில் அம்னோ அதன் போராட்டத்தைத் தொடரலாம் என மாபுஸ் கூறினார்.
இது பாஸ் கட்சி கொண்டு வரவிருக்கும் புதுவித ஜனநாயகமோ?.