ஆஸ்திரேலியா எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியை விரைவில் முடித்துக் கொள்ளலாம்

mhஇந்தியப் பெருங்கடலில் காணாமல் போன MH370 விமானத்தைத் தேடும்  பணி விரைவில் முடிவு  வரலாம் எனத்  தெரிகிறது. தேடும்  பணியை  நிறுத்துவது பற்றி  ஆஸ்திரேலியா, சீனா,  மலேசியா  ஆகியவை விவாதித்து  வருவதாக  ஆஸ்திரேலிய  துணைப்  பிரதமர்  கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி,  239 பயணிகளுடனும்  பணியாளர்களுடனும்  கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங்   பறந்துசென்ற  அவ்விமானம்  திடீரென்று காணாமல்  போனது. இதுவரை  அதைப்  பற்றிச்  சிறு  தடயம்கூட  கிடைக்கவில்லை. அது  மாயமாய்  மறைந்தது  விமானப்  போக்குவரத்து  வரலாற்றில்  ஒரு  மிகப்  பெரிய  மர்மமாக  விளங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் பெர்த்  நகருக்கு  1,600 கிலோமீட்டர்  தொலைவில்  அதைத்  தேடும்பணி  இப்போது  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

அதில்  எதுவும்  தட்டுப்படவில்லை  என்றால்,  தேடும்பணியைத்  தொடர்வதா  கைவிடுவதா  என்று  முடிவெடுக்க  வேண்டிய  நிலை  வரலாம்   என  ஆஸ்திரேலிய  துணைப்  பிரதமர்  வாரன்  ட்ரஸ்  கூறினார்.