பினாங்கில் ஜனவரியிலிருந்து போலீஸ் காவலில் நான்கு இறப்புகள் நிகழ்ந்துள்ளதைக் கண்டு மாநில போலீஸ் காவலில் நிகழும் இறப்புமீதான பணிக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதன்படி சராசரி மாதம் இரண்டு இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த ஆண்டு முழுவதும் நிகழ்ந்துள்ள இறப்புகளுடன்- ஏழு இறப்புகள்- ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை அதிகம்தான் என பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி கூறினார்.
இது “கலவரமளிக்கும்” நிலவரம் என்பதால் அதன் தொடர்பில் பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரகிம் ஹனாபியுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றாரவர்.
இதுதான் 3ம் உலகத்திற்கும் ஒன்றாம் உலகத்திற்கும் உள்ள வேற்றுமை. அங்கு ஓர் உயிர் போனாலும் அதற்க்கு விசாரணை உண்டு. அதிலும் ஜால்ராக்கள் விசாரணையில் உட்கார முடியாது.
ஐயா மலேசியா இந்திய நலன் விரும்பிகளே ……முதலில் இந்தியர்கள் குற்ற செயல்களில் இருந்து எப்படி விலகுவது என்று வலியுறுத்துங்கள்………இந்தியர்கள் ஜெயிலுக்கு போனால் முடிவு இறப்புதான் …இன்னும் எப்படி தான் சுட்டு புரியவைக்கிறது….இந்திய பொறம்போக்குகளுக்கு வக்காலத்து வாங்கியது போதும் …. போயி மக்களை கவனிங்க…..