மலேசிய வரலாற்றிலேயே தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப் போவதாக ஒரு பிரதமர் (மிரட்டி) இருப்பது இதுதான் முதல்தடவை ஹனிபா மைடின் கூறுகிறார்.
தற்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோவின் பெரும் தலைவர்களை எல்லாம் மிஞ்சி விட்டார் என்றார் ஹனிபா.
தீயவரான மகாதிர், பலவீனமான பாக் லா (அப்துல்லா படாவி) ஆகியோர் வழக்கு தொடர்ந்ததில்லை என்று ஹனிபா செய்தியாளர்களிடம் கூறினார்.
சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான ஹனிபா, சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை
பிரதமருக்கு உண்டு என்பதை ஒப்புக்கொண்டார்.
அவரது உரிமையை நாங்கள் பிரச்சனையே இல்லை என்று கூறிய பாஸ்சின் சட்டப் பிரிவு தலைவரான ஹனிபா, ஒரே மலேசியா மேம்பாடு பெர்ஹாட் பற்றி விமர்சித்ததற்காக ஹராக்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ள நஜிப் அதே விவகாரம் பற்றி விமர்சனம் செய்திருந்த த நியுயோர் டைம்ஸ் மற்றும் சரவாக் ரிப்போர்ட் ஆகியவற்றுக்கு எதிராக ஏன் எந்த நடவடிக்கையும் நஜிப் எடுக்கவில்லை என்று வினவினார்.

























மாமாக்தீர் அறிவாளி!