அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர்கள், அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சிறையில் உள்ள எதிரணித் தலைவர் கலந்துகொள்வதை அனுமதிக்கும் விவகாரத்தில் இறுதி முடிவு செய்யும் அதிகாரம் உள்துறை அமைச்சருக்குத்தான் உண்டு என்கிறார்கள்.
“சிறைச் சட்டம் 1995, பிரிவு 31, சிறைத்தண்டனை பெற்ற ஒருவரைத் தகுந்த காரணங்களுடன் எந்தவோர் இடத்துக்கும் அனுப்பி வைக்கும் அதிகாரம் (சிறைத்துறை) தலைமை இயக்குனருக்கு உண்டு எனத் தெளிவுபடுத்துகிறது”, என்று வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரனும் லத்தீபா கோயாவும் ஒர் அறிக்கையில் கூறினர்.
நேற்று, ஜாஹிட் இறுதி முடிவு செய்யும் அதிகாரம் மன்னிப்பு வாரியத்திடம் மக்களவைத் தலைவர், சட்டத்துறைத் தலைவர் ஆகியோரிடமும் உள்ளது என்று கூறியிருந்தார்.
வேண்டுமென்றால் வேரிலும் காய்க்கும்… அம்னோ சதுரங்கம் விளையாட்டு விளையாடுகிறது.!!!!