எம்பேங்க், 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்துக்கு ரிம2 பில்லியன் கடன் கொடுத்ததில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதை பேங்க் நெகாரா கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது என பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கூறினார்.
இவ்விவகாரத்தால் எம்பேங் தலைமை செயல் அதிகாரி அசோக் ராமமூர்த்தியும் மேலும் இரு உயர் அதிகாரிகளும் அண்மையில் பதவி விலக நேரிட்டதாக அவர் கூறிக் கொண்டார்.
பேங்க் நெகாரா, 1எம்டிபிக்கு எம்பேங்க் வழங்கிய கடன்மீது நடத்திய கணக்காய்வில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதைக் கண்டுபிடித்ததை அடுத்து அந்தப் பதவி விலகல்கள் நடந்துள்ளன எனத் தமக்குத் “தகவல் அளித்தவர்” தெரிவித்ததாக ரபிஸி குறிப்பிட்டார்.
“எம்பேங்க் தலைமைத்துவ மாற்றம் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியாமலேயே கமுக்கமாக நடந்துள்ளது”, என்றாரவர்.
கமுக்கமாக இருப்பதெல்லாம் ஒரு நாளைக்குத் தமுக்கு அடித்துக்கொண்டு வெளிவரும்!