சனிக்கிழமை கித்தா லவான் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் கோலாலும்பூரில் ஒன்றுகூடுவது தங்களின் உரிமை என்பதை வலியுறுத்துகின்றனர்.
அத்தரப்பினர், சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட வேண்டும், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சோகோ விற்பனை மையத்துக்கு வெளியில் பேரணி நடத்துவார்கள்.
“அது எங்களின் உரிமை. எங்கள் உரிமை என்னவென்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் போலீசுக்கு இல்லை. சோகோவில் பேரணி நடத்தும் எங்கள் முடிவில் மாற்றமில்லை”, என கித்தா லவான் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஃபாரிஸ் மூசா கூறினார்.
ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெறும் என்று உத்தர்வாதம் கூறிய அவர், போலீஸ் ஒத்துழைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்.
கித்தி லவான்ஆர்ப்பபாட்டத்தில் கலந்துகொள்வோர் மன்னருக்கு கோரிக்கைமனுவும்.தந்தியும் அனுப்புங்கள்
தெரு ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயக நாடுகளுக்கு தனி முத்திரை பதிப்பவை. தெருக் கூட்டங்கள் இல்லையெனில் அது ஜனநாயக நாடே அல்ல. ஆனால் நம் நாட்டில் நடப்பதோ எதிர் மறையாக உள்ளது. தெருக் கூட்டுபவன் எல்லாம் ஆட்சியில் அமர்ந்தால் இப்படித்தான் இருக்கும் போலும்.
அரம்பிசிடானுங்காடா ….வேலே வெட்டி இல்லேனா இப்படிதான்…கூலிக்கு மாரடிக்கும் பயபுள்ளைங்க
சட்டத்தை மீறுவோரை காவல்துறை கைது செய்வதும் அவர் உரிமை! இது எப்படி இருக்கு.