ஞாயிற்றுக்கிழமை அம்னோ தொகுதித் தலைவர்கள் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால்.
இப்படிப்பட்ட கூட்டங்களை அம்னோ எப்போதுமே நடத்தி வந்துள்ளது. தொகுதித் தலைவர்களைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்”, என்று ஷாபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடப்பு விவகாரங்களை அடிநிலை தலைவர்களுக்கு விளக்குவதற்காக அக்கூட்டம் நடத்தப்படுவதாக கிராம, வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அவர் கூறினார்.
“கட்சிக்குள்ளும் புறமும் எழுப்பப்படும் விவகாரங்களால் குழப்பம் ஏற்படாதிருக்கத் தொகுதித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் நிதிப் பிரச்னைகள் போன்ற விவகாரங்களின் விளைவாக நஜிப்மீது தாக்குதல்கள் பெருகிவருவதால்தான் ‘பிரதமருடன் ஒன்றுபட்டிருத்தல்’ என்னும் இக்கூட்டம் நடத்தப்படுவதாக வதந்திகள் உலவுகின்றன.
1எம்டிபி நிறுவனத்துக்கு ரிம3 பில்லியன் கடனளிக்கும் பரிந்துரை ஒன்றை அமைச்சரவை நிராகரித்து விட்டதாகக் கூறப்படுவது பற்றியும் ஷாபியிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
தொகுதித் தலைவர்கள் எல்லாம் குழம்பிப் போய் இருக்கின்றார்கள் என்ற உண்மையை இப்ப நீங்க ஒத்துக் கொள்கின்றீர். அதனால் இந்த விளக்கக் கூட்டம் என்றால் குட்டையை குழப்பியது யார்?. அம்னோவின் எதிரிகளா அல்லது அம்நோகாரர்களேவா?.